பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 57 சகாரனுக்கு மட்டும் சாருதத்தன் 'கருப்பதாசீ புத்திரனாகத் தென்படுகிறான். சாருதத்தன் மேடையில் தோன்றிப் பேசும்போது வறுமையைக் காட்டிலும் மரணம் விரும்பத்தக்கது' என்கிறான். இரப்போர்க்கு ஈத்துவந்த அவன் வறுமையும் 'விண்ணவர்கள் உண்டு எஞ்சிய பிரதமைப் பிறைபோல் மிகவும் அழகு டையதே' என்கிறான் மைத்திரேயன். செல்வமாகிய 'பழஞ்சோற்றைத் தான் உண்ணக் கருதாமல் பிறரை உண்பிக்கக் கருதும் சாருதத்தனின் உள்ளத்தின் ஒளிகண்டு வியக்கின்றோம். வசந்தசேனை “வேசை விலைமகள், ஆசைப்பர்த்தை" என்று சகாரனால் பழிக்கப்பட்டாலும் கற்புக்கரசியாகவே காட்சியளிக்கிறாள். முதல் அங்கத்தில், வசந்தசேனை காதல் நெறியனாகிய சர்ருதத்தனுக்கும் காமவெறியனாகிய சகாரனுக்கும் இடையே நிறுத்தப்படுகிறாள். இந்தச் 'சுயம்வரத்தில் அவள் உயிரோவியமாய் விளங்கும் சாருதத்தனைத் தேர்ந்தெடுக்காமல் ஊர் சுற்றித்திரியும் வெறிநாயைப் போன்ற சகாரனையா தேர்ந்தெடுப்பாள்? அழகிய உள்ளத்தை விரும்பாமல் அழுகிய உள்ளத்தையா விரும்புவாள்? “குணமன்றே காதற்குக் காரணம்' என்று கருதும் அவள் சாருதத்தனைத் தன் காதற் கிழவனாகப் போற்றுகிறாள். அவன் இல்லத்துள் நுழைகிறாள். சாருதத்தனும் வசந்தசேனையும் ஒன்றாவதைச் சகாரனால் பொறுத்துக்கொள்ள முடியுமா? ஆத்திரங்கொள் கிறான். சாருதத்தன், வசந்தசேனையைத் தன்னிட விரைவில் தரவேண்டும்; தந்தால் தன்னோடு நெருங்கி நட்புண்டாகும் இன்றேல் 'இறக்கும்வரை பகைமை