- ஒரு மதிப்பீடு 59 11 சூதர் நிலை முதல் அங்கம் நாடகத் தலைவனை வீட்டிலும் தலைவியை வெளியிலும் காட்டியது. இரண்டாம் அங்கமோ தலைவியை வீட்டிலும் தலைவனை வெளியிலும் காட்டுகிறது. வசந்தசேனையின் வீட்டிலும் அவள் வீட்டை ஒட்டிய வீதியிலும் இரண்டாம் அங்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தெய்வங்க்ளுக்குப் பூசை நிறைவேற்றாமல் தன் கண்கண்ட தெய்வத்தை நினைத்தவாறு - "அதன்பின் அதன்பின்' என்று புலம்பியவாறு இருக்கிறாள் வசந்த சேனை ஒருவாறு, அவள் உள்ளத்தைப் புரிந்துகொண்ட மதனிகை என்னும் சேடி, சாருதத்தன் வறியவனா யிருப்பதை நினைவூட்டுகிறாள். 'அதனாலேயே காமுறு கின்றேன்’ என்கிறாள் வசந்தசேனை. 'நல்குரவுமிக்க ஆடவனை நயந்த நெஞ்சத்தினளாகிய கணிகையே உலகத்தில் இழிவில்லாதவளாகின்றாள்' என்பது வசந்த சேனையின் எண்ணம். தான் கைம்மாறு பெறும் விருப்ப மில்லாதவள் என்று சாருதத்தன் நம்பிக்கை அடைவதற் காகவே தன் அணிகலனை அவனிடம் அடைக்கல மாக்கியதாக வசந்த சேனை கூறுகிறாள். இங்ங்னம் வசந்தசேனை மதனிகையிடம் பேசும் பேச்சிலிருந்து அவள் ஏனைய கணிகையரைப் போல யாரையும் போற்றக் கருத வில்லை என்றும் சாருதத்தனிடம் இன்பம் எய்த விரும்பு கின்றாள்' என்றும் அறியலாம். - வசந்தசேனை சாருதத்தன் காதலை மேலும் தூண்டி ஒளிரச் செய்யும் விதத்தில் ஆசிரியர் இவ்வங்கத்தில் சம்வாககனையும் கன்னபூரகனையும் படைத்துள்ளார்.
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/60
Appearance