பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மண்ணியல் சிறுதேர் போன்ற சூதுகளத் தலைவர் பலர் அரசன் பாலகனைச் சார்ந்தவர்கள் என்றும் ஆரியகனைப் பின்பற்றும் கூட்டம் ஒன்று நாட்டில் இருக்கிறது என்றும் சார்புப் பொருளுக் குரிய செய்தியை இவ்வங்கம் தருகிறது. III கன்னமிடல் முதல் அங்கத்தில் சாருதத்தன் கவலை உணர்வோடு தோன்றினான்; மூன்றாம் அங்கத்திலோ கலை உணர்வோடு தோன்றுகிறான். இரேபிலன் பாடிய இசையைக் கேட்டுக் கிறுகிறுத்து வீடு திரும்புகிறான் மைத்திரேயனோடு. நாய்களும் உறங்கும் நடுநிசியானதால் சாருதத்தன் துங்கப்போகிறான். மைத்திரேயனோ, பாவம், தாங்க முடியவில்லை. வசந்தசேனையின் பொற்பணியை இரவெல்லாம் காத்துக்கொண்டிருக்க வேண்டுமே என்று நினைக்கும்போது அவனுக்கு வந்த ஆத்திரத்தைத் தாங்க முடியவில்லை. 'என் உறக்கத்தைக் களவாடுகின்ற இழிந்த இப்பொற்பணி முடிப்பைக் கவர்வதற்கு உரிய கள்வன் இவ் உச்சயினி நகரத்தில் ஒருவனும் இல்லையா?" என்கிறான்; மெதுவாகத் தன் இமைக் கதவுகளை மூடுகிறான். மைத்திரேயனின் பிராமணத் தன்மை'யைப் பலிக்க வைக்க வருவதைப்போல் சாருதத்தனின் இல்லக் கதவைத் திறக்காமல் கன்னம் வைத்து உள்ளே வருகிறான் சருவிலகன். சாருதத்தனுக்கு இசை உயர்ந்த கலையாகத் தென்படு கிறது. சருவிலகனுக்கோ களவு மிக உயர்ந்த கலையாகத்