76 மண்ணியல் சிறுதேர் அறிமுகப்படுத்தி முதற் கதையையும் சார்புக் கதையையும் இவ்வங்கத்தில்தான் இணைக்கிறார். வண்டி மாற்றத்தால் வசந்தசேனைக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ என்று வேட்கை உணர்ச்சியைத் (Suspense) தூண்டும் விதத்திலும் இவ்வங்கம் அமைந்திருக்கிறது. ஆதலால் இவ்வங்கம்தான் இந்நாடகத்தில் 'உயிர் நிலையாக' உள்ளது எனலாம். - எல்லாவற்றையும்விட இவ்வங்கம் 'நாடகப் பெயர்ப் பொருத்தத்தை நிறுவிச்செல்வதும் நம் கவனத்திற்குரியது. நாடகத்திற்கு "தலைமக்கள் தமது நலமிக்க பெயரினுங் கதையினிற் பாற்கடற் சுதை யெனச் சிறந்த விடயத் தினும்பெயரிடல்உயர் வென்க”* என்பர் பச்சைத் தமிழர் பரிதிமாற் கலைஞர். உரோகசேன னின் அன்னையாவதற்கு வசந்தசேனை மேற்கொண்ட முயற்சியை முன்னமே கண்டோம். வசந்தசேனையைக் காட்டி, 'இப்பெருமாட்டி உன் தாயாவார்' என்று இரதணிகை கூறுவதும், அதற்கு 'இவ்வம்மை என் தாயாயின் எப்படி அலங்காரம் உடையவள் ஆயினள்' என்று உரோகசேனன் கேட்பதும் உடனே அச்சிறுவன் உள்ளத்தில் தைத்த முள்ளின் கொடுமையை நினைத்து நெஞ்சுருகித் தன் கலன்களைக் கழற்றியளித்து 'இப் பொழுது யான் உன் தாயாயினேன்' என்று வசந்தசேனை உரைப்பதுமாகிய நிகழ்ச்சிகள் படிப்பவர் உணர்வைப் பறிகொள்ளும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய உயிர்த் துடிப்புள்ள காட்சியமைக்கக் காரணமாயிருந்தது மண்
- பாற் கடற்கதை பாற்கடல் அமுதம்.
★ நாடகவியல், ப. 214.