பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் I 0.1

ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாந் தலை.

-திருக்குறள்; பெரியாரைப் பிழையாமை : 1

என்று எடுத்துரைக்கின்றார் திருவள்ளுவர்.

ஒரு நாட்டில் இருக்கக்கூடாத ஒன்று உட்பகையாகும். இது குறித்து எச்சரிக்கும் திருவள்ளுவர்,

வாள் போல் பகைவரை யஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.

-திருக்குறள் ; உட்பகை : 2 என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வாறாக, சமுதாயம் சிறப்புற்றோங்க வழிகாட்டி யாக, நல்லது உரைக்கும் சான்றோராக விளங்குகின்றார் திருவள்ளுவர். அவர்தம் கருத்துகள் இன்றைய அமைதியற்ற, சீர்கேடான சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படுவனவாகும். வள்ளுவத்தின் வழி வாழ்க்கையமையுமானால் நாடும் வீடும் மிகுநலம் பெறும் என்பது திண்ணம்.