பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

...............வுளையணிந்து புல்லுண் கலைமாவும் பூட்டிய

எனக் கூறுகின்றான். இச் செய்திகள் அவன்தன் விலங்கியல் அறிவினைப்புலப்படுத்தி நிற்கின்றன.

இயற்கை அறிவு

1. நாஞ்சில் வலவன் நிறம்போலச் செங்கால் மராஅந்

தகைதல்

2. செல்வ மழைத் தடங்கட் சின்மொழிப் பேதைவாய் முள்ளெயிறு ஏய்ப்ப சிறுமுல்லைப் போது அவிழ்தல்

3. நல்லார் இளநலம் போலக் கவினி வளருடையார்

ஆக்கம் போல் காடு பூத்தல்

4. குமிழின்பூப் பொன்செய் குழையின் துணர்துாங்கல்

5. சிரல்வாய் வனப்பினவாகி நிரலொப்ப ஈர்ந்தண்

தளவம் தகைதல்

இவை அனைத்தும் கார்காலத்தில் நிகழக்கூடியன எனக் கூறும் கூற்று அவன்தன் இயற்கை அறிவை உணர்த்தி நிற்கிறது. இப் பூக்கள் அனைத்தும் கார்காலத்தில் பூக்கக் கூடியன எனக் கூறுவது அவன் தன் தாவர இயல் அறிவை உணர்த்துகின்றது.

இயங்திர அறிவு

கார் நாற்பதின் தலைமகன் தன் தேரினைப் பற்றிக் கூறும்போது எந்திரச் செய்கைகளான மாட்சிமைப்பட்ட திண்ணியதேர் எனக் கூறுவது அவன்தன் அலங்கரிக்கப் பட்ட இயந்திர அறிவைப் புலப்படுத்துவதாக அடிைகிறது.