பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் 157

ഖി

கொண்ட தலைவன் மீண்டும் வந்து தன்னைத் தழு அஞ்சாதே’ என்று அன்பொழுகப் பேசி அணைத்தி மாட்டானோ என ஏங்குகின்ற ஏக்க உணர்வு இப்பதிகத்தில் எதிரொலிக்கின்றது.

-

இலங்கை மன்னன் இருபது தோளிறக் கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன் வலங்கொள் மாமதில் சூழ் திரு வாரூரான் அலங்க றந்தெனை அஞ்சல் எனுங்கொலோ

(பதிகம் 303 - பாடல் 8) என்ற பாடலில் தலைவியின் ஏக்க உணர்வு வெளிப்பட்டு நிற்கின்றமை அறியலாம். சம்பந்தரின் பாடல்களில் அமைந்துள்ள அகப்பாட்டு நெறியை முழுமைப்படுத்தி நோக்கும்பொழுது அவற்றில் பண்டையோர் வகுத்த அகமரபு பெரிதும் பின்பற்றப் பட்டிருத்தலைக் காணமுடிகின்றது.

இனி, சம்பந்தர் பெருமானின் பாடல்களில் இயற்கை வளம் இடம் பெற்றிருக்கின்ற மாண்பினைக் காண்பது இன்பம் பயப்பதுடன் கலை உணர்வையும் மிகுவிக்கும்.

நீர் நிறைந்த குளங்களிலும், தடாகங்களிலும் மலர்ந்து மணம் வீசும் மலர்கள் சம்பந்தரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து அவர்தம் கவிதைகளில் சீரியதோர் இடத்தைப் பெற்றிருக்கக் காண்கிறோம். குளங்களில் மலர்ந்திருக்கின்ற பல மலர்களை மங்கையரின் சில உடல் உறுப்புகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார் ஞானசம்பந்தர்.

வாவி தொறும் வண்கமலம் முகம்காட்டச்

செங்குமுதம் வாய்கள் காட்டக் காவி இருக்கும் கருங்குவளை கருநெய்தல்

கண்காட்டும் கழுமலமே.

(பதிகம் 129 - பாடல் 1)