பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் I5

செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.”

ஒருவரையொருவர் விரும்பினதாலே அவர்கள் பின் வாழ்வில் ஒன்றுபட்டனர்.

“கின்வெய்யன் அவனாயின் அவன்வெய்யை நீயாயின்

கின்னை நோதக்கதோ இல்லைமன் கின்நெஞ்சே அன்னைநெஞ்சாகப் பெறின்.”

இவ்வாறு வாழ்வில் இணைந்த இவர்தம் இல்லற வாழ்க்கை பிறர் பாராட்டத் தகுவதாய் உளது. தலைமகள் கெட்டித் தயிரைத் தன் பிஞ்சு விரல்களால் பிசைந்து புளிக்குழம்பு செய்தாள். தாளிப்பு மணம் வரக் கண்களில் புகை சூழ்ந்தும் தானே நின்று தாளிதம் செய்தாள், தயிர்க்கறை படிந்த தன் சேலையை மாற்றி உடுத்தக்கூட நேரமில்லாமல் தலைமகன் உணவிற்கு வந்துவிட அவன் இனிது இனிது என்று கூறி மகிழுமாறு உணவு படைத்தாள். அவன் பாராட்டால் அவன் முகம் சிறிதளவு மலர்ந்தது.

“முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.”42

இவ்வாறு பீடுசான்ற தமிழர் வாழ்வியல் கூறும் நூல்களில் தலையாய பண்பாடாக வற்புறுத்தப் பெறுவது பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பலாகும். வறுமையின் எல்லைக்கோட்டைத் தொட்டுத் துயருழந்த புலவர் பெருஞ்சித்திரனார் பழந்துாங்கு முதிரமலைத் தலைவன் குமண வள்ளலிட மிருந்து பெரும்பொருள் பெற்றுவந்த நிலையிலும் தன் மனைவியை அழைத்து, “முன்னால் கடன்பெற்ற அளவே