பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 29

தலைவனின் சொற்களில் நம்பிக்கை வைத்தது போன்றே அவன் வரும்வரை ஆற்றியிருந்த தலைவியின் நிலையையும் சங்கப் பாடல்களில் காணலாம். குறுந்தொகைப் பாடலொன்றில் இக் கருத்து அ980 மொழியப்பட்டுள்ளது. தச்சன் செய்த சிறிய தேரை இழுத்து இன்பமுறுகின்ற சிறுவர் கள் போல் தேரின்கன் அமர்ந்து செல்ல இயலாத நிலையில் அதனை இழுத்தாவது மகிழும் இறுவர்களைப் போல்தலைவனைச் சேராவிடினும் அவனிடத்து நட்பு மட்டும் பூண்டு மகிழ்ந்தேன். எனவே என் கைவளைகள் நெகிழ்ந்த நிலையிலிருந்து மாறிச் செறிவுற்றன எனக் கூறுகின்றாள் தலைவி.

பொய்கை யூரன் கேண்மை செய்தின் புற்றனெம் செறிந்தன வளையே’

ானவரும் இப்பகுதி ஆற்றியிருத்தல்’ என்னும் பண்பு நிலைக்குச் சீரிய எடுத்துக் காட்டாக அமைகின்றது. மற்றொரு தலைமகள் தலைமகனைக் கண்டாலே போது ானது; அதுவே இன்பமுடைத்து: அவர் வேறெதுவும் தனக்குத் தரத்தேவையில்லை என்று கூறுவதும் இவண் கருதத்தக்கது.

காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலு முள்ளத்திற் கினிதே’

என்னும் இப்பகுதியும் தலைமகளின் ஆற்றியிருக்கும்

அருங்குணச் சிறப்பிற்கு அணியாகின்றது.

அடுத்து, சங்கப் புலவர் ஒருவர் தலைமகன் கூற்றாக | ரைக்கும் ,

ஆறிய கற்பின் அடங்கிய சாயல் ஊடினும் இனிய கூறும் இன்னகை அமிர்து பொதி துவர்வாய் அமர்த்த நோக்கிற் சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்'