பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மண்ணில் நல்ல வண்ண்ம் வாழலாம்

வாழ்தல் வேண்டிப்

பொய்கூறேன் மெய்கூறுவல்: எனச் சிறுசிறு பயன்களுக்காகப் பொய்யுரை பகர்தலைத் தவிர்க்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் வாழப் போகும் காலம் குறுகியது. இக் குறுகிய காலத்தில் மன்னுயிர்க்கெல் லாம் நன்மை செய்து வாழ்வதைக் குறிக்கோள்ாகக் கொள்வது உலகம் உய்வதற்கான வழியை வகுக்கும். எனினும் காலச் சூழலும் சமூக நெருக்கடிகளும் மனிதனை நன்மை செய்யவொட்டாது தடுக்கின்றன. இந்நிலையில் அவன் பிறருக்குக் கெடுதல் செய்யாது இருத்தலே போது மானது. அதுவே அவன் செய்யும் நன்மையாகக் கருதப் பெறும். இக்கருத்தையே,

நல்லது செய்தல் ஆற்றிர் ஆயினும்

அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான்

எல்லாரும் உவப்பது அன்றியும்

நல்லாற்றுப் படு உம் நெறியுமா ரதுவே” என ஒளவையார் தம் பாடலின்மூலம் உரைத்துள்ளார். மனிதனை நல்லாற்றுப்படுத்தும் நெறியாக அல்லது செய்யா திருத்தல் என்னும் பண்பைக் கருதி அதனை நம்முன்னோர் கள் வலியுறுத்தியுள்ளனர்.

மனிதர்களின் வாழ்வு வினைப்பயன் சார்ந்தது. மனிதன் செய்த நல்வினைகள் நன்மையையும் திவினைகள் தீமையை யும் தருவன. இக்கருத்தை இறையியலார் அடிக்கடி வலியுறுத்துவர். இறைக் கொள்கையில் உறுதி கொண்ட நம் ஒளவையாரும்,

வாழச் செய்த கல்வினை யல்லது ஆழுங் காலை புணைபிறி தில்லை

என வினை வழி வாழ்வு அமைவதைச் சுட்டி மக்களுக்கு நற்பண்பினைப் புகட்டுகின்றார். இதிலிருந்து பழந்தமிழர்