பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

வினையே தன் உயிராகக் கொண்ட தலைமகன் தன்வினை முடித்துக் கார்காலத்தில் திரும்பி விடுவதாகக் கூறிச் செல்கின்றான். அதுவரை தன் பிரிவினை ஆற்றி யிருக்குமாறு த ைல ம க ளி ட ம் கூறிச்செல்கின்றான். தலைமகளும் தலைமகன் சொற்படிக் கார்காலம் வரும் வரையில் பிரிவை ஆற்றியிருப்பதாகக் கூறுகிறாள். இருவரும் சொன்ன சொல் தவறாமல் ஒழுகுகின்றனர். இவ்வாறு சொன்ன சொல் தவறாமல்-சொல் திறம்பாமல்-நடத்தலே கற்பு என்னும் ஒழுக்கம். இதனாலேயே முல்லை என்பது கற்பு என்னும் பொருள் உடையதாயிற்று.

சங்க இலக்கியத்தில் முல்லைத்திணைப் பாடல்கள்

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையிலும் பத்துப் பாட்டிலும் முல்லைத்திணைப் பாடல்கள் காணப்படுகின்றன. எட்டுத்தொகையில் ஐங்குறுநூற்றிலும் கலித்தொகையிலும் ஐந்தில் ஒரு பகுதியாக முல்லைத்திணைப் பாடல்கள் காணப் படுகின்றன. அகநானுாற்றில் நாற்பது முல்லைத்திணைப் பாடல்கள் உள்ளன. குறுந்தொகை , நற்றிணைகளிலும் சில பாடல்கள் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்களில் முல்லைநில வருணனை இடம் பெறுகிறது. பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டு முழுவதும் முல்லைத்திணை பற்றி எழுந்த நூலாகும். சங்க. இலக்கியத்தை அடுத்துத் தோன்றிய கர்ர்நாற்பது பாடல் களும் முல்லைத்திணையின் சிறப்பை எடுத்துரைப்பன. பதினெண்கீழ்க்கணக்கில் அமைந்த வேறு சில பாடல்களும் முல்லைத்திணையில் அமைந்தவையே. பின்னர்த் தோன்றிய காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்கள் சிலவற்றிலும் முல்லைத் திணை பற்றிய குறிப்புக்களைக் காணலாம். பொதுவாக முல்லைத்திணைப் பாடல்களை நோக்கும்போது உள்ளதை உணர்ந்தவாறு பாடும் நிலையே காணப்படுகிறது.