பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

பாடல்கள் அல்ல என்பது சிலர் கருத்து என மொழிகின்றார் டாக்டர் மு.வ.

தமிழில் முல்லைத்திணைப் பாடல்கள்

ஆங்கிலத்தில் உள்ள முல்லைப் பாடல்களைப் போன்ற முல்லைப் பாடல்களைத் தமிழில் காணமுடிவதில்லை. தமிழ் இலக்கியத்தில் அமைந்த முல்லைப் பாடல்கள் ஆங்கிலத்தில் உள்ள முல்லைப் பாடல்களைப் போன்று கடன் வாங்கல்கள் அல்ல. முல்லை நிலத்து வளத்திலும் வனப்பிலும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த புலவர் செம்மல்களின் உள்ளத்து வெளிப்பாடுகள் அவை. முல்லை நிலத்து வாழ் மக்களின் வாழ்க்கைச் செய்திகள், இயற்கைப் படப்பிடிப்பு, தலைமகன் தலைமகளிரின் அன்பின் பிணைப்பு முதலியனவற்றை முல்லைத்திணைப் பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

முதற்பொருள் வருணனை

முல்லைத்திணைக்குரிய முதற்பொருள்கள் முல்லை நிலமும் கார்காலமும் மாலைப்பொழுதும் ஆகும். இவற்றைப் பின்புறமாகக் கொண்டு எழுந்த முல்லைத் திணைப் பாடல் கள் பல

முல்லை நிலமாகிய காட்டினைப் பற்றிக் கூற வருகின்ற புலவர் அம்முல்லைநிலப் பூக்களின் வண்ணத்தையும் வடிவத்தையும் கண்டு கற்பனை மெருகேற்றிப் பாடுகின்றார். செறிந்த இலைகளையுடைய காயா மரத்தில் அஞ்சனம் போன்ற நீலநிற மலர்களும் இளந்தளிர்கள் கொத்துக் கொத்துக்களாகத் தோன்றும் கொன்றை மரத்தில் நல்ல பொன் காசு போன்ற மலர்களும் வெண்காந்தளின் குவிந்த முகைகள் அழகிய கைபோல் மலர்ந்த மலர்களும் இதழ் நிறைந்த தோன்றியில் குருதி போன்ற செந்நிற மலர்களும்