பக்கம்:மதன கல்யாணி-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 163

குன்றிப் போய் ஒடுங்கி நின்ற பாலாம்பாள் வெளிப்பட்டு, “அப்பா! என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ திறவுகோல் இருக்கிறது. அதோ இரும்புப் பெட்டி இருக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போங்கள். என் உடம்பிலிருக்கும் நகைகளை எல்லாம் கொடுக்கச் சொன்னாலும் இதோ கொடுத்துவிடுகிறேன்” என்று கூறிய வண்ணம் தனது கழுத்திலிருந்த கொத்து சாவியை எடுத்து நீட்ட, அதைப் பெற்றுக் கொண்ட கட்டையன், “அது தான் புத்திசாலி களுக்கு அளகு சரி ஒம்மேலே இருக்கிற நவெகிவெ எல்லாத்தெயும் களட்டிக் கீளேவை” என்று கூறிய வண்ணம், இரண்டு திருடரை அவளண்டையில் நிறுத்தி விட்டு இன்னொருவனோடு இரும்புப் பெட்டிக்குப் போய், அதைத் திறந்தான். அதற்குள் இரண்டு தகரப் பெட்டிகள் காணப்பட்டன. இரண்டும் பூட்டாமல் இருந்தமை யால், கட்டையன் இரண்டையும் திறந்தான்; ஒன்று நிறையப் பவுன்களும் ரூபாய்களும் நோட்டுகளும் இருந்தன; மற்றொன்றில் வைரம், சிவப்பு, பச்சை, தங்கம், வெள்ளி முதலியவற்றாலான ஆபரணங்கள் நிறைந்திருந்தன. அந்தப் பெருத்த தனத்தைக் கண்ட கட்டையனது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது; உள்ளம் பூரித்தது; அந்த இரண்டு பெட்டிகளையும் அவன் எடுத்து தன் னோடிருந்த திருடனிடம் கொடுத்துவிட்டு, இரும்புப் பெட்டியின் பக்கத்திலிருந்த இன்னொரு பெருத்த மரப்பெட்டியைத் திறந்தான்; அதற்குள், விலை உயர்ந்த ஜரிகைச் சேலைகளும், பட்டுச் சேலைகளும், பாவாடைகளும், தாவணிகளும், ரவிக்கைகளும் நிறைந்திருந்தன. உடனே கட்டையன் குறவன் அவற்றை எல்லாம் வாரி எடுத்து ஒரு பெருத்த மூட்டையாகக் கட்டி, அதையும் பக்கத்தில் இருந்த திருடனிடம் கொடுத்த பின், பாலாம்பாள் தனது உடம்பில் இருந்த நகைகளை எல்லாம் கொடுத்து விட்டாளா என்று அவளது பக்கம் திரும்பிப் பார்க்க, அவள், அநேகமாக எல்லா ஆபரணங்களையும் கழற்றிக் கொடுத்துவிட்டதன்றி கடைசியாகத் தனது கையிலிருந்த கெட்டிக்காப்பை விலக்க மாட்டாமல் தவிக்க, அதைக் கண்ட திருடர், அவளது கையைப் பிடித்து, ஒவ்வொரு காப்பாக விலக்க முயன்று கொண்டிருந்தனர். அதைக் கண்ட கட்டையன் குறவன், அவர்கள் கழற்றுகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/181&oldid=649624" இலிருந்து மீள்விக்கப்பட்டது