பக்கம்:மதன கல்யாணி-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மதன கல்யாணி

இருக்கிறது! நம்முடைய குலத்தைக் கெடுக்க வந்த கோடாறிக்காம்பு தான் மாட்டிக் கொண்டிருக்கிறான். இதில் எழுதப்பட்டிருக்கிறபடி அவன் செய்யக்கூடியவன் தான். சந்தேகமில்லை. அடாடா! ஈசுவரன் எனக்கென்று எப்பேர்ப்பட்ட பிள்ளையைப் படைப் பித்தான் பார்த்தீர்களா இவனால், நமக்கு ஏதேனும் பெருத்த துன்பமும் மானஹானியும் நேரும் என்று நான் நிரம்ப காலமாக நினைத்திருந்தேன். அந்த நினைவு இன்றைக்குப் பலித்தது! அவன் சுகப்பட வேண்டும் என்று நாம் நாளைய தினம் நிச்சயதாம்பூலம் மாற்ற நினைத்ததென்ன! அவனுடைய துரதிர்ஷ்டமென்ன! கண்மணியம்மாள் சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய பெண்ணா! மகா லக்ஷமிை என்பதும் அவளுக்குத் தகும். அப்பேர்ப்பட்ட உத்தமியை அடைய அவன் பாக்கியம் செய்யவில்லையே! ஆகா! என் வயிறு பற்றி எறிகிறதே! என்ன செய்யப் போகிறேன்?” என்று கூறித் தனது அடிவயிற்றில் பலமாக அறைந்து கொண்டு கண்ணி விட்டு கலங்கி அழவே, அதைக் கண்ட சிவஞான முதலியார், “அவன் மேல் ஏற்பட்டிருக்கும் குற்றங்களோ சாதாரணமானவை அல்ல. கூட்டுக் கொள்ளை கொலை முதலிய பெருத்த குற்றங் களுக்கு மரண தண்டனையல்லவா சம்பவிக்கும். அதனால் இந்தக் குடும்பத்தாருக்கு என்றைக்கும் அழியாத மானக்கேடு வருவதோடு, இந்த சமஸ்தானமே அநியாயமாக பங்காளிகளுக்குப் போய் விடுமே. உங்களுடைய செல்வாக்கும், செல்வமும், ஜெமீந்தார் என்ற பட்டப்பெயரும், அவன் ஒருவனிடத்தில் அடங்கி இருக்கையில் அவன் நினைத்த இடங்களில் கெட்டலைந்து இப்படிப்பட்ட துன்பங்களில் மாட்டிக் கொள்ளலாமா?” என்று துன்பகரமாகவும் கலக்கமாகவும் கூறினார். -

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “அப்படியானால் பையன் இதிலிருந்து தப்ப முடியாதென்றா நினைக்கிறீர்கள்? இதனால் நமக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவானாலும் பாதகமில்லை. பையனை மீட்கும்படியான வழி ஏதாவது இருந்தால், அதைச் செய்யுங்கள்” என்று மிகுந்த கவலையோடும், விசனத்தோடும் கூறி

இறைஞ்சினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/250&oldid=649731" இலிருந்து மீள்விக்கப்பட்டது