பக்கம்:மதன கல்யாணி-1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 மதன கல்யாணி

அவளது அபாரமான கேசம் அவிழ்ந்து விரிந்து தாறுமாறாகப் போயிருந்ததையும் அவளது உடைகளும், மெத்தையும் கண்ணி ரினால் முற்றிலும் நனைந்து கிடந்ததையும் காணவே, மீனாகூஜியம் மாள் பெரிதும் வியப்படைந்து, “அடாடா என்ன விபரீதம் இது பகலில் இருந்து இது வரையில் அழுது கொண்டா படுத்திருந்தாய்! இவ்வளவு மும்முரமாக அழுவதன் காரணம் என்ன?” என்றாள். அதைக் கேட்ட கண்மணியம்மாள் திடுக்கிட்டெழுந்து, மெத்தையை விட்டிறங்கி, தனது உடைகளையும் கேசத்தையும் விரைவாகச் சரிப்படுத்திக் கொண்டு, ஒன்றையும் அறியாதவள் போலவும், வேறு எதையோ கவனிப்பவள் போலவும், தனது பார்வையை வேறே பக்கமாகத் திருப்பிக் கொண்டு நின்றாள். உடனே மீனாகூஜியம்மாள், “கண்மணி என்ன இது? நீ என்ன அறியாத குழந்தையா? இவ்வளவு நேரம் எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்? நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டு சந்தோஷ மாக இருக்க வேண்டும் என்று நான் எவ்வளவோ பிரயாசைப் படுகிறேன். நீ கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாதவளாக நடக்கிறாயே! இன்னமும் அந்தத் துஷ்டனுடைய நினைவு உன்னுடைய மனதைவிட்டு நீங்கவில்லையா! அடாடா! இருந்திருந்து உன்னுடைய ஆசை, மிகவும் கேவலமான ஒரு வேலைக்காரனிடத்தில் ஏற்பட்டது தான் ஆச்சரியமாக இருக்கிறது: நீ ஆசைப்பட்ட மனிதன் என்ன காரியம் செய்தான் பார்த்தாய் அல்லவா? கள்ளைக் குடித்துவிட்டு கண்ட பெண்பிள்ளைகளை எல்லாம் கையைப் பிடித்திழுக்கும் குணமுடையவனான ஒரு தாசி மகனைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்க, உனக்கு வெட்கம் மானம் ஒன்றுமில்லாமல் போய் விட்டதா? உன்னுடைய ஜென்மம் ஒரு ஜென்மமா? பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறதென்று பனம்பழத்தை யாராவது ஆகாரமாகச் சாப்பிடுவார்களா? கல்யாணியம்மாள் சொன்ன வரலாற்றைக் கேட்ட பிறகாவது நீ உன்னுடைய மனசை மாற்றிக் கொண்டிருப் பாய் என்றல்லவா நினைத்தேன். நீ முன்னிலும் அதிகமான சண்டித்தனம் செய்கிறாயே! குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்லுவார்கள். அதைப் போல, வாழ்க்கைப் பட்டாலும் பெருத்த சமஸ்தானாதிபதியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/319&oldid=649872" இலிருந்து மீள்விக்கப்பட்டது