பக்கம்:மதன கல்யாணி-1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 மதன கல்யாணி

இரண்டு தினங்களும் பொறுத்துக் கொள்ளுங்கள். நாளைய தினம் நான் நேரில் வந்து விவரங்களை எல்லாம் நன்றாகச் சொல்லுகி றேன். மன்னிக்கவும்.

இங்ஙனம் அன்புள்ள

கல்யாணியம்மாள்.

- என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை தனக்குள்ளாகவே படித்துப் பார்த்துக் கொண்ட கண்மணியம்மாளது மன நிலைமையை என்னவென்று சொல்வது! நிச்சயதாம்பூல முகூர்த்தம் அன்று நடக்காமல், இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப் பட்டதை உணரவே, அவளது உள்ளம் கரைகடந்த மகிழ்ச்சியினால் பொங்கி எழுந்தது. உடலம் பூரித்தது. ஈசுவரன் தனது பக்கத்தில் இருந்து மறைவாக ஏதோ சூசனை செய்து வருகிறான் என்று நினைத்தவளாய், அவள் உடனே கடவுளைத் தனது மனதிற்குள்ளாகவே துதித்துக் கொண்டாள்; அந்த இரண்டு நாட்களுக்குள், தான் எப்படியும் முயன்று மதனகோபாலனை நேரில் கண்டு, தனது ஐயத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையும், கடவுள் வேறே ஏதாகிலும் ஒர் இடைஞ்சலை உண்டாக்கி அந்த முகூர்த்தத்தை நிறைவேற்றாமல், எப்படியும் தடுத்துவிடுவார் என்ற ஒர் உறுதியும் கொண்டாள். ஆனால், அவள் தனது மகிழ்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தனது முகக்குறி முதலியவற்றை அடக்கிக் கொண்டவளாய், அந்தக் கடிதத்தினால் எவ்வித முகமாறுபாடின்றி பழையபடி துயரமே வடிவாக நின்று அந்தக் கடிதத்தை மடித்து மீனாகூஜியம்மாளிடம் கொடுத்து விட்டாள். அதன் பிறகு மீனாஷியம்மாள் தனது இயற்கைப்படி அந்த விஷயத்தைப் பற்றியே பன்னிப் பன்னிப் பேசி, புண்ணில் கோலைச் சொருகுவதுபோல, அடிக்கடி தனது சொல்லம்புகளால் கண்மணியை வருத்திக் கொண்டே இருக்க, அதன் பிறகு அவளது காலைக் கடன்களும் பகல் போஜனமும் நிறைவேறின. பகலில் மீனாகூஜியம்மாள் தானே புறப்பட்டுப்போய், கல்யாணியம்மாளது தேகஸ்திதியைப் பற்றி நேரில் விசாரித்துவிட்டு வருவதாகச் சொல்லிப் போய் விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/327&oldid=649890" இலிருந்து மீள்விக்கப்பட்டது