பக்கம்:மதன கல்யாணி-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 மதன கல்யாணி

அன்றைய பகலில் துரைஸானியம்மாளது அந்தப்புரத்தில் அவன் அவளோடு தனியாக இருந்த காலத்தில், அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து யோசித்து ஒருவாறு முடிவு செய்திருந்தனர். அன்று காலை வரையில் துரைஸ்ானியம்மாள் தனது தாய் தனக்கு அவ்வளவு சமீப காலத்தில் கலியாணம் செய்து வைக்கமாட்டாள் என்றும், தான் பங்களாவில் இருந்த படியே மோகனரங்கனிடத்தில் நட்பாக இருந்து வரலாம் என்றும் நினைத்திருந்தாள். ஆனால் அன்று காலையில், கல்யாணியம்மாள் மீனாகூஜியம்மாளுக்கு எழுதியனுப்பிய கடிதத்தின் விஷயங்களை உணர்ந்த பிறகு, அவளது எண்ணம் மாறிப்போய்விட்டது. அன்றைக்கே, மோகனரங்கனை அனுப்பி, சென்னையில் ஜனங்கள் அடர்ந்ததும், எவராகிலும் எளிதில் கண்டு கொள்ளக் கூடாததுமான ரகசியமான ஒர் இடத்தில், ஒரு தனி வீட்டை அமர்த்திக் கொண்டு வரச் செய்ய வேண்டும் என்றும், மறுநாள் இரவில் மோகனரங்கன் வாடகைப் பெட்டிவண்டி ஒன்றைக் கொணர்ந்து பங்களாவிற்கு சற்று துரத்திற் கப்பால் நிறுத்தி வைப்ப தென்றும், அவள் நடுஇரவில் எவருக்கும் தெரியாதபடி எழுந்து வெளிப்பட்டு வண்டிக்குப் போய்விடுவதென்றும், அவள் போகும் போது சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறும்படியான உயர்ந்த ஆபரணங்களை அபகரித்துக் கொண்டு போய் வண்டியி லேறி, புதிய வீட்டிற்குப் போய்விடுவதென்றும் அவள் அவனிடத்தில் பிரரேபிக்க, அவன் அதை அப்படியே ஆமோதித்து ஒப்புக் கொண்டான் தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கலியாணம் செய்து கொள்வது கூடாத காரியம் ஆதலால், இருவரும் உண்மையான கணவனையும் மனைவியையும் போலத் தங்களது ஆயுட்காலம் வரையில் கூடிக்கலந்து பிரியாமல் இருந்து கல்யாணியம் மாளது இடைஞ்சலின்றி எப்போதும் சுகித்திருக்க வேண்டும் என்று இருவரும் ஒருவருக்கொருவர் பிரமாணத்தின் மூலமாக உறுதி செய்து கொடுத்து விட்டனர். ஆகவே, மோகனரங்கன் அந்தப் பெண்மாணிக்கும் இனி தனக்கே உரியவள் என்றும், அவளால் தான் தேவேந்திர போகம் அனுபவிக்கப் போவதாகவும் எண்ணி இன்பக் கனவு கண்டு கொண்டிருந்த நிலைமையில், அவன் அந்த அணங்கை விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/130&oldid=645870" இலிருந்து மீள்விக்கப்பட்டது