பக்கம்:மதன கல்யாணி-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மதன கல்யாணி

அநாதைகளான தன்னையும், தனது அக்காளையும் குழந்தைப் பருவத்திலிருந்து காப்பாற்றிக் கல்வி பயற்றி, இருவரையும் இரண்டு விதமான தொழிலில் அமர்த்தி, பிழைப்பதற்கு வழி செய்து வைத்த மகா உபகாரியமான சிவஞான முதலியாரது சொல்லை மீறவும் அவனது மனம் துணிவடையவில்லை. அவன் துணிந்து, அவரது ஏவலைச் செய்ய மறுப்பதனாலும், அவர் தன்னை மாரமங்கலத்தாரது பங்களாவின் குமாஸ்தா வேலையில் இருந்து நீக்கிவிட்டால் அப்போதும், தான் துரைஸ்ானியம் மாளைப் பார்க்கும் சந்தர்ப்பம் தனக்கு இல்லாமல் போய்விடும் ஆதலால், அவன் இருதலைக்கொள்ளி எறும்பு போல எந்த வழியிலும் செல்லமாட்டாதவனாய், திருடனைப் போல விழித்துக் கொண்டு நின்றான். அவ்வாறு அவன் முற்றிலும் குழப்பமும் சஞ்சலமும் அடைந்து நின்றதைக் கவனிக்காதவர் போலவும், வேறு எதையோ கவனிப்பவர் போலவும் நடித்த சிவஞான முதலியார் உடைகளை அணிந்து கொண்டவராய், தமது தம்பிக்கு எழுதப்பட்ட கடிதத்தையும் நாலைந்து ரூபாய் பணத்தையும் எடுத்துத் தமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு, “வா; போகலாம்” என்று அன்பான குரலில் அவனை அழைத்தவராய் மெத்தைப் படிக்கட்டை நோக்கி நடக்கலானார். மோகனரங்கனோ தனது மனநிலைமையையும் தனது அந்தரங்க விஷயங்களையும் வெளியிட மாட்டாதவனாய், முற்றிலும் சோர்ந்து தளர்ந்தவனாய், அவருக்குப் பின்னாக மெல்ல நடக்கத் தொடங்கினான். அவனது நினைவு முற்றிலும், கட்டழகியான துரைஸானியம்மாளது கோமளாகர வடிவத்திலேயே சென்று லயித்துப் போயிருந்தது; அவனது மூளையோ கிருகிரென்று சுழன்று கொண்டிருந்தது; அவனது மனமோ பெருங் குழப்பத்தில் ஆழ்ந்து கிடந்தது; கைகால்கள் எல்லாம் தள்ளாடி நிலைதடுமாறிப் போயின. அவனது தோற்றமோ, மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளச் செல்லும் குற்றவாளியின் தோற்றத்தைப் போல மகா பரிதாபகரமாக இருந்தது. அந்த நிலைமையில் இருந்த மோகனரங்கன் பின்னும், சிவஞான முதலியார் முன்னுமாகச் சென்று, படிகளை விட்டிறங்கி வாசலை அடைந்தான். அவ்விடத்தில் வேலாயுதம் பெட்டி வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/136&oldid=645878" இலிருந்து மீள்விக்கப்பட்டது