பக்கம்:மதன கல்யாணி-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 495

வேலைக்காரி, “மாரமங்கலத்து மைனரு தொரெ குடுத்தாங்க” என்றாள்.

துரைராஜா:- அவர் இப்போது எங்கே இருக்கிறார்?

வேலைக்காரி: மைலாப்பூருலே வாலாம்பா அம்மாளோடே வங்களாவுலே இருக்காங்க. அங்கனே யிருந்துதான், நான் இப்ப

வாரது. -

துரைராஜா:- (முன்னிலும் அதிகமான வியப்படைந்து) அப்படி யானால், நீ அந்த பாலாம்பாளுடைய வேலைக்காரியா!

வேலைக்காரி:- இல்லீங்க; நான் இங்ஙனே மாரமங்கலத்து வங்களாவுலே இருக்கிற வேலைக்காரி. தொரெஸானியம்மா என்னே ஒரு சோலியா மைனருக்கிட்ட அனுப்பிச்சாங்க; நான் இன்னெக்கிக் காத்தாலே தான் அங்கனெ போனேன். அவுங்க இதுங்களை எல்லாம் ஒங்ககிட்ட குடுத்துப்புட்டுப் போவச் சொல்லி என்னெ அனுப்பிச்சாங்க.

துரைராஜா:- இந்த மூட்டையிலே என்ன இருக்கிறதென்பது உனக்குத் தெரியுமா?

வேலைக்காரி:- தெரியாதுங்க.

துரைராஜா:- உன்னுடைய பெயரென்ன?

வேலைக்காரி:- என்னொடெ பேரு குப்பம்மா.

துரைராஜா:- - துரைஸானியம்மாள் உன்னை ஏதோ அலுவலாக, மைனரிடத்தில் அனுப்பினதாகச் சொன்னாயே; அது என்ன அலுவல். -

வேலைக்காரி:- அவுங்க ஒரு கடுதாசி குடுத்து அனுப்பிச்சாங்க, அது என்ன சங்கதியின்னு தெரியாதுங்க - என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா, அங்கே நின்ற வேலைக்காரனை உடனே வெளியில் அனுப்பிவிட்டு, மைனரால் எழுதப்பட்டிருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்துத் தன் மனதிற்குள்ளாகவே படித்துக் கொண்டான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/199&oldid=645991" இலிருந்து மீள்விக்கப்பட்டது