பக்கம்:மதன கல்யாணி-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மதன கல்யாணி

ஜோலி இருக்கையில், அதற்கு இடைஞ்சலாக நான் வந்து விட்டேனோ என்னவோ ஏதடா இந்தக் கிழவன் வந்து கழுத்தை அறுக்கிறானே என்று நினைத்துக் கவலைப் படுகிறீர்களோ என்னவோ!” என்று பரிகாசமாகவும், சந்தோஷமாகவும் பேச, அதைக் கேட்ட துரைராஜா தனது முகத்தை முன்னிலும் அதிக இனிதாக மலர்த்திய வண்ணம் புன்னகை செய்து கிலேசம் தோற்று வித்து, “நன்றாகச் சொன்னிகள் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை; உங்களுடைய சிநேகம் எனக்கு ஏற்படுவதைப் பற்றி நான் எவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? அப்படி இருக்க, நான் இதைப்பற்றி வருந்துவதாவது? ஒரு நாளும் இல்லை. அந்த விஷயம் இருக்கட்டும்; மதனகோபாலன் இப்போது எப்படி இருக்கிறான்? அதை முதலில் சொல்லுங்கள். எனக்கு நேற்று ராத்திரி முதல் அதே கவலையாகவும் விசனமா கவும் இருக்கிறது, இன்று காலையில் நான் எழுந்தவுடனே அங்கே வந்து, அவன் என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதை நேரில் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஆனால், அதற்குள் வேறோர் அவசரமான ஜோலியைக் கவனிக்கும்படி நேர்ந்தது. அது, காலை முதல் 12-மணி வரையில் பிடித்தது. ஆகையால் நான் அங்கே வரக்கூடாமல் போய்விட்டது என்று அந்தரங்கமான அன்போடு கூற, செட்டியார், “சரிதான்; அவன் நேற்று ராத்திரி முழுதும் கண்ணைத் திறக்கவே இல்லை. இன்று காலையிலே அந்த டாக்டர் வந்து காயத்தைக் கட்டிவிட்டு, உள்ளுக்கும் மருந்து கொடுத்து விட்டுப் போனார். காலை முதல் அவனுக்குக் கடுமையான ஜூரம் உண்டாகி இருக்கிறது. இன்னம் சில நாட்கள் வரையில் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளாவிட்டால், அவன் பிழைப்பது அரிதென்று டாக்டர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். ஆகையால், நானும் மற்றவர் களும் அவனுக்குப் பக்கத்திலேயே எச்சரிப்பாக உட்கார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. நான் ஒரு மணிக்கு இங்கே வந்து உங்களைக் காண்பதாகச் சொல்லி இருந்ததைக் கருதி அந்த ஏற்பாட்டுக்குப் பழுது உண்டாகக் கூடாதென்று நினைத்து, அவனுடைய தங்கையை பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு வந்து சேர்ந்தேன். ஏனென்றால், நீங்களோ பெரிய இடத்துக் குழந்தை. நீங்கள் அநேகம் நண்பர்களைப் பார்க்கும்படியாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/228&oldid=646047" இலிருந்து மீள்விக்கப்பட்டது