132 மதன கல்யாணி
எல்லாம் ஜெமீந்தாரிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள். மாரமங்கலம் சமஸ்தானத்து ஜெமீந்தாரிணியம்மாளுடைய ஆண் குழந்தையை சில வருஷங்களுக்கு முன் கட்டையன் குறவன் என்ற ஒருவன் திருடிக் கொண்டு போய் வேறே யாரோ ஒருவனி டத்தில் விற்றுவிட்டதாகவும், அந்தக் குழந்தையின் உடம்பிலே ஒரு மச்சம் இருந்ததாகவும் இந்த அம்பட்டச்சியும் இன்னொருத்தி யுமாகக் கூடி, இவளுடைய மகனான இந்த மைனருடைய உடம்பில் யாரோ ஒரு டாக்டரைக் கொண்டு, திராவகத்தின் உதவியால், மச்சம் போல சுடச்செய்து, அந்த அம்மாளுடைய பிள்ளை தான் என்று கொண்டு போய்க் கொடுத்து விட்டதாகவும், அந்தப் பிள்ளைதான் இந்த மைனர் என்றும், அந்த ஜெமீந் தாரிணியம்மாளுடைய உண்மையான பிள்ளை யாரிடத்தில் விற்கப்பட்டதென்ற விவரம் எழுதப்பட்ட ஒரு துண்டுக் காகிதத்தை அவள் எங்கேயோ வைத்திருப்பதாகவும், தான் போய் அதை எடுத்து, அதன் மூலமாக அந்த உண்மையான பிள்ளையைக் கண்டு பிடிக்கப் போவதாகவும், அந்தக் கிழவி சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது சாயுங்காலம் ஏழரை மணி இருக்கலாம. பங்களாவின் வெளியில் இருள் சூழ்ந்திருந்தது. அந்தக் கிழவி வாசற்படிக்குப் பக்கமாக இருந்த ஒரு கட்டிலில் இருந்தாள். அப்போது இந்த மைனர் குபிரென்று உள்ளே பாய்நது தமது கையில் இருந்த ஒரு கத்தியால் அந்தக் கிழவியின் மார்பில் குத்திவிட்டு ஓடிப்போய் விட்டார். உடனே ஜெமீந்தாரும் ஆட்களும் வெளியே ஒடினார்கள். அதன் பிறகு அவர்கள் மைனரைப் பிடித்துப் போலீசாரிடத்தில் ஒப்புவித்து வந்ததாகச் சொன்னார்கள். ஆனால் அதை எல்லாம் நான் பார்க்கவில்லை. இவ்வளவு தான் எனக்குத் தெரியும் - என்று மதனகோபாலன் வாக்குமூலம் கொடுத்தான்.
உடனே ஜட்ஜி, பாரிஸ்டர் குரோட்டன் துரையை நோக்கி முதலாவது சாட்சியான மதனகோபாலனை குறுக்கு விசாரணை செய்யும்படி சொல்ல, அதைக் கேட்ட பாரிஸ்டர் குரோட்டன் துரை மிகவும் ஆடம்பரமாக எழுந்து நின்று, "கோர்ட்டார் அவர்களுக்கு ஒரு மனு; இந்த வழக்கில் போலீசார் எல்லாக் காரியங்களையும் பரம ரகசியமாக நடத்தி இருக்கிறார்கள். யார் யார்
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/136
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
