பக்கம்:மதன கல்யாணி-3.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 மதன கல்யாணி கொஞ்சமும் பயப்படத் தேவையில்லை. ஏதாகிலும் வேண்டு மானால் கோபாலா என்று கூப்பிடுங்கள். இந்த வாசலில் நிற்கும் ஜெவான் உடனே வந்து உங்களுடைய உத்தரவை நிறைவேற்று வான்" என்றார். உடனே கல்யாணியம்மாள், "சரி; அப்படியே செய்யுங்கள். எங்களுடைய மன வேதனையில், இப்போது படுக்கையிலும் சாப்பாட்டிலும் மனசு செல்லவா போகிறது. எப்படியாவது இந்த ராத்திரி எவ்விதத் துன்பமுமில்லாமல் கழியுமானால், அதுவே போதுமானது. நீங்கள் நிரம்பவும் சிரமப்பட்டு எங்களுக்காகக் கொண்டு வந்திருக்கும் இந்தப் பழங்களை எல்லாம் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்" என்று மிகுந்த கிலேசத்தோடு நயமாகக் கூறினாள். உடனே இன்ஸ்பெக்டர், "பரவாயில்லை. சுத்தமாக ஏன் பட்டினி கிடக்க வேண்டும். ஏதாவது பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு நேரமாகிறது. நான் போய்விட்டு வருகிறேன். கதவை மூடிக்கொள்ளுங்கள்" என்றார். உடனே கல்யாணியம்மாள் வாசற் கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டாள். உடனே இன்ஸ்பெக்டர் அந்தக் கதவின் வெளிப்புறத்திலிருந்தே தாளை மாட்டிப் பூட்டிக்கொண்டு அப்பால் போய்விட்டார். அவ்வாறு உட்புறத்தில் விடப்பட்ட மூவரும் அங்கே இருந்த பொருட்களையும் நாற்காலி மேஜைகளையும் சுற்றிப் பார்க்கத் தொடங்கினர். துரைஸானியம்மாள் ஒரு சோபாவின் மேல் உட்கார்ந்து சாய்ந்து கொண்டாள். கல்யாணியம்மாள் உடனே உட்கார்ந்து கொள்ளாமல் அந்த ஹால் முழுதும் சென்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாள். சுவரில் பல ஜன்னல்கள் இருந்தன. அவற்றின் கதவுகள் எல்லாம் மூடி வெளிப்புறத்தில் தாளிடப் பெற்றிருந்தன. சுவரின் ஒரமாக நாலைந்து பீரோக்கள் இருந்தன. சற்று தூரத்திற்கப்பால் ஒரு சிறிய அறை இருந்தது. அதற்குள் ஒரு மின்சார விளக்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவ்விடத்தில் தண்ணிர் குழாயும், ஒன்றுக்குப் போக வசதியும் இருந்தன. அந்த