ஆண்டவனும் பகுத்தறிவும்
99
ஆனால்,நாம், நல்லது நல்லதே என்பதை அறிவோம். நாம் தீது நல்லது அல்ல என்பதையும், நல்லது தீது அல்ல என்பதையும் அறிவோம். நாம், ஒளி இருள் அல்ல என்பதையும், இருள் ஒளி அல்ல என்பதையும் அறிவோம். ஆனால் நாம் அறிவோம், நன்மையும், தீமையும், இயற்கைக்கு மீறிய ஆற்றலான ஆண்டவனால் திட்டமிடப்பட்டு, உண்டாக்கப்பட்டவை அல்ல என்பதை. அவை இரண்டையும் அவசியத்தின்பாற்பட்டவைகளாகவே நாம் கருதுகிறோம். நாம் அவற்றிற்காக வாழ்த்துப் பாடுவதுமில்லை. வசைபொழிவதுமில்லை. நாம் அறிவோம், சில தீமைகளை அகற்றிவிடமுடியும் என்பதையும். நன்மையைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதையும், நாம் மூளையை வளர்ப்பதன் மூலமும், அறிவைப் பெருக்கிக்கொள்வதன் மூலமும் இதனைச் சாதித்துக்கொள்ளலாம் என்பதை அறிவோம். கிருத்தவர்கள் எப்படித் தங்களது கடவுளை மாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அப்படியே, அவர்கள் தங்களது பைபிளையும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நடக்கமுடியாதவைகளையும், அபத்தமானவைகளையும், கொடுமையானவைகளையும், மதிப்புத் தாழ்ந்தவைகளையும் அப்பால் தூக்கி எறிந்துவிட்டு, எப்படியேனும் கடவுள் அருளிய வேதத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதும், என்ற அளவுக்கு, ஆயிரக்கணக்கானவர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும் பழுத்த பழமை விரும்பிகள் அதனுடைய ஒவ்வொரு சொல்லையும் பற்றிக்கொண்டு நிற்பதோடு, அதன் ஒவ்வொரு வரியையும் உண்மையென்றே நம்பிக் கொண்டிருக்கத்தான் செய்கின்றனர். வெறும் படிப்பாளர்கள் சிலர் இருக்கிறார்கள். பைபிள் என்ன சொல்லுகிறதோ அதுதான் அவர்களுக்கு 'பைபிள்' அவர்கள் விளக்கவுரையேதும் வேண்டமாட்டார்கள். விளக்கவுரை செய்வோரைப்பற்றி அவர்களுக்குக் கவலையேயில்லை. முரண்பாடுகள் அவர்களுடைய பக்தியை அசைத்துவிட முடியா. எந்தவித முரண்பாடுகள் இருப்பதையும் அவர்கள் மறுத்துரைப்பார்கள். அவர்கள் அந்தப் புனித வேதத்திற்குப்