உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல ஆவிகளும் கெட்ட ஆவிகளும்

57


திருக்கவில்லை. கேடுகள் அனைத்திற்கும் மூல்காரணம் சாத்தான்தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை வெள்ளமும், வறுமையும், பிளேக்கும் புயலும் நில அதிர்ச்சியும் போர் முயற்சியும், சிலசமயங்களில், நம்பிக்கை யிழந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க, ஆண்டவனால் அனுப்பப்பட்டவை என்று அவர்கள் எண்ணினர். அந்தக் கொடுமைகளைத் தடுக்கும்படி, முழங்காற்படியிட்டுக்கொண்டு வெளுத்த உதடுகளால் வழிபாட்டுரை கூறிக் கடவுளை வேண்டிக்கொண்டனர். அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டனர்; தாங்கள் செய்த பாவங்களை ஒப்புக்கொண்டனர்; குளுரைகளாலும் வேண்டுதலைகளாலும் வானவெளியை நிரப்பினர்; புரோகிதர்களுடைய உதவியைக்கொண்டும், வழிபாட்டுரைகளின் உதவியைக் கொண்டும் பிளேக்கை அகற்ற முயன்றனர், அவர்கள் புனித நினைவுக்குறிகளை முத்தமிட்டனர்; கோயில்கள் தோறும் விழுந்தெழுந்தனர்; அன்னை மேரி அருமை மகான்கள் ஆகியோரின் ஆதரவை வேண்டினர்; ஆனால் வழிபாட்டுரைகளெல்லாம் இதயமற்ற காற்று வெளியில் இறந்தொழிந்தன; பிளேக் அதன் வலிமை முழுவதும் காட்டி உலகை அழிக்கவே செய்தது! நமது அறிவிற் குறைவுடைய தந்தைமார்கள், அறிவியலைப்பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படைக் காரணங்களாக, அவர்கள், நல்ல ஆவிகளையோ அல்லது கெட்ட ஆவிகளையோ, தேவதைகளையோ அல்லது பிசாசுகளையோ, கடவுள்களையோ அல்லது பூதங்களையோ வைத்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் இயற்கைக் காரணம் ஒன்றைக்கொண்டிருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை, எல்லாம் ஆவிகளின் வேலைப்பாடுகளே என்று கருதினர். எல்லாம் இயற்கைக்குமீறிய