மூடநம்பிக்கை 5
தேவதைகள் பறந்துவிட்டன!
இப்பொழுது, எவன் கொழுந்துவிட்டெரியும் பகுத்தறிவுச் சுடரைத் தன்மூளையில் ஏற்றிவைத்திருக்கிறானோ, எவன் ஆராய்ச்சி செய்துபார்க்கும் அறிவைப் படைத்திருக்கிறானோ, எவன் சிரித்துப் பார்க்கும் தன்மையைக் கொண்டிருக்கிறானோ, எவன் சான்றுகளைச் சரி தூக்கிப் பார்க்கும் திறம் உடையவனாக இருக்கிறானோ, அவ அடையாளங்களிலும். அதிர்ஷ்ட – துர் அதிர்ஷ்ட நாட்களிலும், அதிர்ஷ்ட – துர் அதிர்ஷ்ட எண்களிலும் நம்பிக்கை கொள்ளவே மாட்டான். வெள்ளிக்கிழமைகளைப் போன்றவையே தாம் வியாழக்கிழமைகளும் என்பதையும் பன்னிரண்டைக் காட்டிலும் பதின்மூன்று எந்த விதத்திலும் கேடுபயக்கக்கூடியது அல்ல என்பதையும் அவன் அறிவான். சிவப்புக் கற்கள், வைரங்கள் சாதாரண கண்ணாடி எந்த அளவுக்கு மனிதனைப் பாதிக்குமோ அதே அளவுதான் வெள்ளைக் கற்களும் பாதிக்கும் என்பதை அவன் அறிவான், ஒரு பெண்ணின் திருமண வாய்ப்புகள் ஒரு மலரிலுள்ள இதழ்களைப் பொறுத்தோ அல்லது ஒரு ஆப்பிள் பழத்திலுள்ள விதைகளைப் பொறுத்தோ, கூடவோ குறையவோ ஆகிவிடா என்பதையும் அவன் அறிவான். ஒரு படக் கொட்டகைக்குள் முதன்-