உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மதமும் மூடநம்பிக்கையும்


தோடும், நரக உலகத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்! அவர்கள், தங்கத்தெருக்களையும், முத்து வாயில்களையும் கொண்டிருந்த புதிய ஜெருஸலம் நகரோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர்! அந்தக்காலங்களில் ஈனக்கின் மாற்றம் அறிவுக்கு ஒத்ததாகவே கொள்ளப்பட்டது; பெருவெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, கடவுளின் பிள்ளைகள் பூவுலகத்திற்கு வந்து மனிதர்களின் பெண்களோடு காதல் புரிந்தார்கள் என்பதைப்பற்றியாரும் ஐயப்பாடு கொண்டதில்லை! வானுலகை எட்டிப்பிடிக்கப் பேபல் கோபுரம் கட்டத் தொடங்கியபோது, கடவுள் வந்து அவர்களுடைய மொழிகள், அவர்களில் ஒருவர்க்கொருவர் புரியாத வண்ணம் செய்த காரணத்தினால்தான் அதனைக் கட்டி முடிக்க முடியாமற்போயிற்றே யொழிய, இல்லையானால் அதனைக் கட்டத்தொடங்கியவர்கள், கட்டியே முடித்திருப்பார்கள் என்றே, மதவாதிகள் நம்பினர்!

ஆண்டவனின் அருள் பாலிக்கப்பட்டதாகக் கருதப்படுகிற அதே நாட்களில், மதபோதகர்கள் மோட்ச உலகத்தைப்பற்றியும், நரக உலகத்தைப் பற்றியும் எல்லாம் அறிந்திருந்தார்கள்! கடவுள் ஆசையினாலும் அச்சத்தாலும் வாக்குறுதியினாலும் அச்சுறுத்தலாலும், வரமளிப்பதாலும், தண்டனை கொடுப்பதாலும் இவ்வுலகை ஆண்டு வந்தார் என்று, அவர்கள் அறிந்திருந்தனர்! கடவுள் அளிக்கும் வரம் எல்லையற்ற காலத்தது; அதுபோலவே தான் அவர் கொடுக்கும் தண்டனையும்! சரியையும் தவற்றையும் கண்டறிந்துகொள்ளும் அளவுக்கு, மனிதனுடைய மூளையை வளர்க்க வேண்டும் என்பது ஆண்டவனுடைய திட்டமாக இருந்ததில்லை! அவர் அறியாமையைக் கற்பித்தார்; அதுவும் கீழ்ப்படிதலைத்தவிர வேறெதையும் கற்பித்ததில்லை கீழ்ப்படிதலுக்கு அவர் கால எல்லையற்ற பேரின்பத்தை அளித்தார்! அவர் வணங்கிக் கொடுப்பவர்களையும், முழங்காற்படியிடுவர்களையும், குப்புறக் கவிழ்பவர்களையும் அவர் விரும்பினார்! அவர் ஐயங்கொள்வோர்களை ஆராய்ச்சிபுரிவோரை,சிந்தனையாளர்களை, தத்துவாசிரியர்களை வெறுத்-