86
மதமும் மூடநம்பிக்கையும்
அது மிகவும் கடமைப்பட்டதாகும். அது வாழ்வு நடத்து வதற்கு, மூட நம்பிக்கையின் எதிரிகளுக்கே அது மிகவும் கடமைப்பட்ட தாகும். சில ஆண்டுகளுக்கு முன்புதான், இத்தாலி, ஜியார்டனோ புரூனோவுக்கு, நினைவுச் சின்னம் எழுப்பும் பெருஞ்செயலை செய்து முடித்தது! புரூனோ "மூர்க்க மிருகத்திற்கு" இரையாகிப் போனவர், இத்தாலி பெற்றெடுத்தவர்களிலே மிகச் சிறந்து விளங்கினவர்!
ஸ்பெயின், ஒருபொழுது, உலகில் பாதிப்பகுதிக்குச் சொந்தக்காரியாய்த் திகழ்ந்தது; அவளுடைய பேராசைக் கைகளில் உலகின் பொன்னும் வெள்ளியும் நிறைந்திருந்தன். அந்த நேரத்தில் உலக நாடுகளெல்லாம், மூட நம்பிக்கை என்னும் இருளில் மூழ்கியிருந்தன அந்தச் சமயத்தில் இந்த உலகமானது புரோகிதர்களால் ஆளப்பட்டு வந்தது. ஸ்பெயின் அதன் மதக் கொள்கையை, விடாப்பிடியாகப் பற்றியிருந்தது. சில நாடுகள் சிந்திக்கத் தொடங்கின ஆனால் ஸ்பெயின் மத நம்பிக்கையை இழக்காமலேயே இருந்தது.சில நாடுகளில் புரோகிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழந்தனர்; ஆனால் ஸ்பெயினில் மட்டும் அவர்கள் ஆதிக்கம் அழியவில்லை ஸ்பெயின் செப மாலையை உருட்டிக்கொண்டும், கன்னி மேரியைத் துதித்துக்கொண்டும் இருந்தது. ஸ்பெயின், அதனுடைய ஆன்மாவைக் காப்பாற்றுவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது அது தன்னுடைய பேராசையால், தன்னைத்தானே அழித்துக்கொண்டது. அது இயற்கைக்கு மீறிய ஆற்றலை நம்பியிருந்தது. அது அறிவைப் பற்றி நிற்கவில்லை, மூட நம்பிக்கையையே பற்றி நின்றது. அதனுடைய வழிபாட்டுரைகளெல்லாம் பதிலளிக்கப்படவேயில்லை. மகான்களெல்லாம் இறந்து போயினர். அவர்கள் என்ன செய்வார்கள்.