மதுரைக்கோவை. முதலாவது- களவியல். கைக்கிளை. - கோவையென்பது, நேரினமணிகணிரைபடக் கோப்புழிக்கோவை யெனப் பெயர்பெற்றாற்போல, அகப்பொருட்கிளவிக ளணிபெறக் கோக் கப்படுவதாகலின், கோவையெனப் பெயர்பெற்றது. அகப்பொருளென்ப தென்னையெனின் :- அகத்தினானாயபயனாம். ஈண்டகமென்ப தியாதோ வெனின்:- ஒருவனுமொருத்தியுந் தம்முளொத்தவன் பினராய்க்கூடுங்கூட் டத்தின்கட்பிறந்த வின்பமென்க. என்னை "ஒப்புமுருவும் வெறுப்புமென் றா - கற்புமேருமெழிலுமென்றா சாயலுநாணுமடனுமென்றா - நோயும் வேட்கையு நுகர்வுமென்றாங் - காவயின் வரூஉங்கிளவியெல்லா - நாட்டி யமரபினெஞ்சுகொளினல்லது - காட்டலாகாப்பொருளவென்ப" என்றா ராகலின், உண்மைமாத்திரையுணர்த்திப் பிழம்புணர்த்தப்படா துணர்வுநு கர்வதாயகத்தே நிகழ்தலின், அது, ஆகுபெயராயகமெனவாயிற்று.தொல் காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியலென்பதற்கு நச்சினார்க்கினி யாரு மிவ்வாறே யுரை கூறினார். அவ்வின்பப்பொருள் ஈண்டுக் களவுகற் பென்னு மிருவகைக் கைகோளாற் பெறப்பட்டது. என்னை "அளவையி லின்பத் தைந்திணைமருங்கிற் - களவுகற்பென விருகைகோள் வழங்கும்' என்றாராகலின், கைகோளென்புழிக் கையென்பதொழுக்கம்; கோளென் பது கொள்ளுதல். கொள்ளுதலென்பது புடைபெயர்ச்சியையுணர்த்துந்தல் விகுதிகெட்டு, கெட்டவழி முதனீண்டு, நிறைகோட்பறையென்றாற்போல நின்றது. இதற்கிலக்கணம், தொல்காப்பியச் சூத்திரவிருத்தியிற்காண்க. - - களவென்பது, என்னை "அன்பினைந்திணைக் களவெனப்படுவ-தந் தணரருமறை மன்றலெட்டனுட் கந்தருவவழக்க மென்மனார்புலவர்" என்றாராகலின். என்னை " அறநிலையொப்பே பொருட்கோடெய்வம் - யா ழோர்கூட்ட மரும்பொருள் வினையே - யிராக்கதம்பேய்நிலை யென்றிக்கூ றிய - மறையோர்மன்ற லெட்டிவையவற்றுட் - டுறையமைநல்லியாழ்ப் பு. லமையோரியல்பிதன் - பொருளவென்மனார் புலமையோரே" என்பதான், இவ்வெண்வகை மணங்களுள் காந்தருவமணமாம். அது, இருவர் தலைவ னுந்தலைவியுந் தம்முளொத்தார்பொழி லகத்தெதிர்ப்பட்டு, கொடுப்பாரும் டுப்பாருமின்றி, தாமேதமியராய்ப் புணர்தலாம். ஆயின், மறையொழுக்க மன்றே, களவெனப்பெயர்கூறிய தெற்றுக்கெனின்;- இருவருங் கரந்த வுள்ளத்தராய்க் கூடுபவாகலானும், இன்னம்பலநிமித்தத்தானுமென்க. ப லநிமித்தமென்பன நண்டு விரிப்பிற் பெருகுமாகலின், பொருணூற்களிற் தண்க.
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/3
Appearance