உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 என்பது வத்தலக்குண்டு வழியாகத் தெற்குநோக்கிப் பாய்ந்து, ஐயம்பாளையம் ஆற்றில் கலந்துவிடுகிறது. மஞ்சளாற்றின் குறுக்கே ஓர் அணை மதுரை - பெரியகுளம் சாலையிலுள்ள தேவதானப்பட்டி அருகே கட்டப்பெற்று உள்ளது. பழனி மலைத்தொடரில் தோன்றும் வேறு சில ஆறுகள் குடகனாறு, நங்காஞ்சி ஆறு,நல் தங்கியாறு, சண்முக நதி என்பவை. இவை யாவும் காவிரியின் துணையாறான அமராவதியில் இணைந்து விடுகின்றன. சண்முகநதி பழனி நகர் அருகே ஓடுவதால் அங்குக் கோயில் கொண்டிருக்கும் சண்முகர் பெயரைப் பெற்றது. இச் சிற்றாறு வில்பட்டி, பூம்பாறைப் பள்ளத்தாக்குகளில் வழியும் நீரைப் பெற்றுப் காட்சி தருகிறது. பெருமழைக் காலங்களில் பேராறுபோலக் சண்முகநதி என்னும் பெயருள்ள மற்றோர் ஆறு இந்நாளில் வறட்டாறு என வழங்குகிறது. தென்மேற்கு வடகிழக்குப் பருவக் காற்றுக் காலங்கள் தவிர ஏனைய நாள்களில் வறண்டிருப்பதால் இவ்வாறு பெயர் ஏற்பட்டது. இந்த ஆறு கம்பம் வட்டம் காமயக்கவுண்டன்பட்டிக்கு அருகே இரு மலைகளுக்கு நடுவே அமைந்தது. 4 மாவட்டத்தின் நடுவே அமைந்தது, தமிழ் கண்டதோர் வைகை. இதன் சரியான பெயர் வையை என்பதாகும். சங்க காலத்தில் தமிழுடன் சேர்த்துப் புகழ் பெற்ற சிறப்புடையது இவ் வையை. "தமிழ்வையைத் தண்ணம்புனல்" "தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன் பரிமா நிரையின் பரந்தன்று வையை" எனப் பரிபாடல் வையை ஆற்றைப் புகழ்கின்றது. பரிபாடலில் மதுரை நகர் பற்றியும் வையை ஆறுபற்றியும் பல பாடல்கள் உள. "நாரியிடம் பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று வாரியிடம் போகாத வையையே - இடத்தும் வலத்தும் இருபுறத்தும் நடக்கும் பாண்டி வளநாடு" பெருந்தொகை.