உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கடல் வாணிகத்தில் சிறந்த பாண்டியர் போற்றியதில் வியப்பு ஒன்றும் இல்லை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேசுவரர் கோயிலின் உள்சுற்றில், கல்விருட்சமாகிய கடம்ப மரத்தின் பட்டுப்போன பகுதி வெள்ளிக் கவசம் போட்டுப் பேணப்பட்டிருப் பதைக் காணலாம். கடம்பனாறு என்னும் பெயரில் இலங்கையில் ஓர் ஆறு இருக்கிறது.கடம்பர் என்ற கூட்டத்தார் மதுரையிலிருந்து கேரளத்திலுள்ள கண்ணனூருக்குச் சென்றதாகவும் அவர்கள் குடியேறிய ஊர் கடம்பில்வாயில் என்று பெயர் பெற்றதாகவும் பதிற்றுப்பத்தில் கூறப்பெறுகிறது. பழனிமலைத் தொடரிலுள்ள எண்ணற்ற மரம் செடி கொடிகள் நோய் நீக்கும் மருந்துகளை, எண்ணெய்களை, களிம்பு களை,லேகியங்களை,தைலங்களைச் செய்ய உதவுகின்றன. பழனியி லுள்ள மருத்துவச்சாலைகள் இவற்றைப் பயன்படுத்தி மூலநோய், பித்தம், வாய்க்கசப்பு, மூளைக்கொதிப்பு, உடல்வெப்பம், விரை வீக்கம். மலக்கட்டு ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்துகளைச் செய்கின்றன. பூச்செடிகளின் பெயர்களைக் கொண்ட ஊர்களும் மதுரை மாவட்டத்திலுண்டு. சான்று: வஞ்சிநகரம், தும்பைப்பட்டி ரண்டும் மேலூர் வட்டத்தில், மதுரை - திருச்சிச் சாலையில் உள். பூலாம்பட்டி என்னும் சிற்றூர் பூலாஞ்செடியை நினைவூட்டுவது. மதுரைமாவட்டத்துக் காடுகளில் தேக்கு, சந்தனம்,மூங்கில், புளூ கம் (Blue gum), யூகலிப்டஸ் ஆகிய மரங்கள் பெரிய அளவில் வளர்கின்றன. கானல் - காடு. கோடைக்கானல் அருகே பிரம்புக்கானல் (பிரம்புக்காடு) இப்பகுதி கோடையிலிருந்து பெரியகுளத்துக் காட்டு வழியில் செல்லும் பழங்கால நடைபாதையில் இருக்கிறது. உளது. இவ்வாறே கோடைக்கானலின் சரியான பெயர் கொடிக்கானல் என்பதாகும் (என்பர் சிலர்). கொடி-செடி காடி (CREEPER). 1914இல் வெளியான மதுரை மாவட்டக் கெஜட்டியரில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோடைக்கானல் என்பது மரூஉ,