உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயப் பொதுநோக்கு 27 இந்நாளில் எம்மதமும் சம்மதம் (SECULAR STATE) என்னும் கொள்கை பெரிதும் பரவி மிகவும் போற்றப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டிலேயே இதை நாயக்க மன்னர்கள் கடைப் பிடித்தனர். இந்து சமயத்தில் பற்றுமிக்கவராக இருந்தாலும் பிற சமயத்தாரிடம் அவர்கள் அன்பு பாராட்டினார்கள். திருமலை நாயக்கர் மதுரைக்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்களுக்குப் பேராதரவு காட்டினார். ராணி மங்கம்மாள் திருச்சிராப்பள்ளி அருகேயுள்ள சில ஊர்களை ஆந்திராவிலுள்ள பேணுகொண்டா தர்க்காவுக்குக் காணிக்கையாக வழங்கினார். நாயக்க மன்னர்கள் சமயச் சார்பற்ற அரசாங்கத்தை மட்டும் நடத்தவில்லை, சமுதாய நல அரசையும் நிறுவினர். வீரப்ப நாயக்கர் (1572-1595) இவர் திருச்சிக் கோட்டையைச் சீர்திருத்தினார்; அருப்புக்கோட்டையில் புதிதாக ஒரு கோட்டையைக் கட்டினார்; சிதம்பரம் கோயிலுக்குப் புதிய வெளிமதில் அமைத்தார்; அந்தணர்க்கு ஏராளமான நிலங்களை வழங்கினார். இவருடைய வரலாறுகளும் கல்வெட்டுகளும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இவர் செய்த காடைகளைக் கூறுகின்றன, பாண்டியர்களை இவர் அன்புடன் நடத்தினார். ண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601) தென்காசிப் அரியநாத முதலியார் இறந்தபின் நாயக்கர் ஆட்சிக்கு ஏற்றமும் பெருமையும் கொடுத்துப் புகழ் பரப்பியவர் இவரே ஆவார். முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601-1609) இவர் காலத்தில்தான் ராபர்ட்-டி- நோபிலி என்ற பாதிரியார் ரோமாபுரியிலிருந்து வந்து தமிழ் பரப்பினார்; தம் சமயத்தையும் வளர்த்தார். சமயங்கட்கு ஆதரவு முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் பல அளித்ததோடு மத மாற்றத்துக்கும் இடம் கொடுத்தார். திருமலை நாயக்கர் மதுரைக்குப் பெருமைதந்த நாயக்க மன்னர் இவரே.