உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்' அரசியல் தலைவர்களும் ஏனையோரும் தத்தமது சாதிக்காகத்தான் வாழ் கின்றனர். அப்பாவி மக்கள்தாம் இதில் ஏமாறுகிறார்கள். மாநிலத்தையோ, பார்சிகளைப்பற்றித் தெரியாமல் மகாராட்டிர சீக்கியரைப்பற்றி அறியாமல் பஞ்சாபு மாநிலத்தைப் பற்றியோ, ரெட்டிகளைப்பற்றி விவரிக்காமல் ஆந்திர மாநிலத்தைப் பற்றியோ புரிந்துகொள்ள இயலாது. எனவே, இன்றைய மதுரை மாவட்டத்தைப் புரிந்துகொள்ளுவற்கு இன்றியமையாத சில விவரங்களை மட்டும் கொடுப்போம். முதலாவதாக, மக்கள் பின்பற்றும் மதங்களைக் கூறுவோம். சைவம் தொன்றுதொட்டுச் சைவ மணம் கமழும் மாவட்டம் மதுரை. சமணத்தோடு நடந்த ஏராளமான போட்டிகளிலும் பூசல்களிலும் வாகை சூடி, சைவ சமயம் தமிழ்நாடெங்கும் மறுமலர்ச்சி பெறக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகள் மதுரை மாவட்டத்திலேயே நடைபெற்றன. இம் மாவட்டத்துத் திருவாதவூரில் தோன்றிய மாணிக்கவாசகர், 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்ற சிறப்பை உடைய திருவாசகத்தை அருளியவர், எத்நாட்டார்க்கும் இறைவனான சிவபெருமான் தென்னாடு டையவன் என்று முழக்கமிட்டவர். சைவசமயத்துக்குப் பெருமைதரும் செயல்கள் பலவற்றின் நிகழிடம் மதுரையே. சம்பந்தருடைய தேவாரப் பதிக ஏடுகளை நெருப்பிலும் நீரிலும் இட்டு மெய்ப்பித்துச் சைவசமயமும் திருநீற்றின் ஒளியும் இங்கு விளங்கி எங்கும் பரவியுள.64 திருவிளையாடல்களைச் சிவபெருமான் இங்குச் செய்து காட்டினார் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். திருநீறு, கண்மணி (உருத்திராக்கமணி), சடைமுடி அணிந்து மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனார் போன்ற பெரியோர்கள் வாழ்ந்த திருத்தலம் மதுரை. சக்தி வழிபாட்டுக்குச் சிறப்பானது என்று சைவர்கள் கருதும் தலங்களுள் ஒன்றாகவும் மதுரை அமைந்துள்ளது. பாடல் பெற்ற பதிகள் இந்த மாவட்டத்தில் உள. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றை உடைய சிறப்பும் மதுரை மாவட்டத்தைச் சாரும்.