உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' 39 ஆவணி மூல விழா மதுரையில் நடைபெறும் சிறப்பான் வி ழாவாகும். சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடலை நினைவூட்டுவது. இவ்விழாவின் இறுதியில் இறைவனும் இறைவியும் வீதிவலம் செல்லும் வீதியே ஆவணி மூல வீதியாகும். அந்நாளில் இந்த மடத்துத் திருவாயிலில் சிறப்பான மண்டகப்படிகளை ஆதீனகர்த்தர் நடத்துவது மரபு. மேல மாசி வீதியிலுள்ள திருஞானசம்பந்தர் தெரு இப் போது கல்லறைச் சந்து என வழங்குவது மீண்டும் பெயர் மாற்றப் பெற வேண்டும். பிற நகரங்களில் கோழி கூவிப் பொழுது புலர்வது வழக்கம். ஆனால், மறைகளின் பண் முழக்கம் கேட்டுத்தான் மதுரையில் பொழுது புலரும் என்று பரிபாடல் என்னும் பழமையான நூல் கூறுகிறது. இச் சிறப்புக்கு ஏற்ப, தமிழ்நாட்டு மடாலயங்களிலேயே காலத்தால் பழமையான திருஞானசம்பந்தர் ஆதீனம் இந்த நகரத்தில் உள்ளது. திருஞானசம்பந்தர் திருமேனி, இங்குப் பூசையில் இருந்து வருகிறது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர் சிலர் சைவசமயத்தினராக இல்லாவிட்டாலும், அவர்கள் இச் சமயத்துக்கு ஆக்கம் கொடுக்கத் தவறியதில்லை. சான்றாக, முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623), திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஈசானத் தம்பிரானை வரவழைத்துத் தலயாத்திரை செய்யச் சொல்லி, பாபநாசம், திருப்புடைமருதூர், செவ்வல், திருநெல்வேலி,முரப்பநாடு, வள்ளியூர் ஆகிய ஆறு ஊர்களில் கிளை மடங்கள் நிறுவச்செய்து அவற்றுக்குத் தேவையான நிலங் களை முற்றூட்டாக வழங்கினார். பிரம்மானந்த சுவாமிகள் மடம், தெற்கு வாசலுக்கு அருகே ரயில் பாதையைக் கடக்கும் இடத்தில் உள்ளது. தெற்கு வெளி வீதியில் 164- ஆம் கதவு இலக்கம்கொண்டு குட்டையைய சுவாமிகள் மடாலயம் உள்ளது. இன்னும் பல மடங்களும் உள்ளன. குட்டையைய சுவாமிகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். சுவாமி சந்நிதி யில் கொடிமரத்தைச் சூழச் சிற்பக்கலை எழிலுடன் அமைந்துள்ள