உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 நெடுஞ்சடையப் பராந்தகன் என்னும் வரகுண பாண்டியன் 'பரம வைஷ்ணவநாம் தனிக' என்ற சிறப்புப் பெயரைச் சூட்டிக் கொண்டான். அவன் திருமாலுக்குக் கோயில் கட்டிய செய்தி சீவரமங்கலச் செப்பேடுகளில், காஞ்சிவாய்ப் பேரூர்புக்குத் திருமாலுக்கு அமர்ந்துறையக் குன்ற மன்னதோர் கோயிலாக்கியும் என்னும் வரிகளால் தெரிகிறது. இவன் காலத்தில் ஆனைமலையில் நரசிங்கப்பெருமாள் குடைவரைக் கோயில் கட்டிமுடிக்கப் பெற்றது. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரும் பாண்டியநாட் டினரும், இவன்காலத்தில் வாழ்ந்தவருமான பெரியாழ்வாரை, இவன் தன்னுடைய ஞானகுருவாக ஏற்றுக்கொண்டிருந்தான். பிற சமயத்தவருடன் வாதிட்டுச் சைவசமயத்தைத் திருஞானசம்பந்தர் நிலைநாட்டியது போன்று பெரியாழ்வாரும் பிற சமயத்தாருடன் வாதிட்டு வைணவத்தை நிலைநிறுத்தினார். வைணவர்களின் திராவிட வேதமாகிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் தொடக்கப் பாசுரங்கள் மதுரை மாநகரில் பிறந்தவையே. பெரியாழ்வாருக்கு முன்னால் தோன்றிய ஆழ்வார் பலர் அருளிய பாசுரங்கள் பல இருந்தும், இந்த ஆழ்வார், பாண்டிய மன்னனுடைய அவையில் திருமாலின் பெருமையை நிலைநாட்டி, பாண்டியனிடமிருந்து பொற்கிழி பெற்றார் என்பதைச் சான்றோர் அறிவர். ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபனும் அவன்பேரன் வீரநாராயணனும், வைணவத்தைத் தழுவினர். இவர்கட்கு இடைப்பட்ட இரண்டாம் வரகுணன்,சைவனாக இருந்தான். பாண்டிய நாட்டில் சைவ வைணவச் சச்சரவுகள் முன்னாளில் இல்லை; இந்நாளிலும் இல்லை என்பது நம் கவனத்திற்கு உரியது. 13-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மாவீரன் சடாவர்மன் சுந்தர பாண்டியன் பொன்வேய்ந்த கோயில்கள், சைவர், வைணவர் ஆகிய இரு சமயத்தார்க்கும் முறையே முதன்மையான தலங்களாக விளங்கும் தில்லையும் திருவரங்கமும் ஆகும். பாண்டியர்கள் ந்து க்களின் ஆதரித்தனர் என்பது, ஆறு சமயங்களையும்