உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 நிலைநாட்டினான் அவன் சமணனாக இருந்ததால், ஏழாம் நூற்றாண்டில் மன்னராலும் மக்களாலும் பேராதரவு பெற்றுச் சமணத்துறவியர் ஆயிரக்கணக்கில் மதுரையைச் சுற்றியுள்ள குன்றுகளில் தங்கித் தமிழ்நூல்களை இயற்றியும் ஆய்ந்தும் வந்தனர். அரசு நிலங்கள் பள்ளிச்சந்தமாக அருகன் பள்ளிகளுக்கு வழங்கப்பெற்றன. சைவம் நிலையிழந்து கிடந்ததைக் கண்டு (அரசியாரும் மணிமுடிச் சோழன் மகளுமான) மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிரையாரும் மனம் வருந்தினர். இச்சூழலைப் போக்க வல்லவர் நாளும் தமிழ்இசையால் சைவம் பரப்பும் திருஞானசம்பந்தர் என்பதைக் கேள்வியுற்று அவரை மதுரைக்கு வருமாறு அவ்விருவரும் அழைத்தனர். அவரும் அதை ஏற்றார். ம். சம்பந்தர் மதுரையின் எல்லையை அடைந்த செய்தி கேட்டுச் சமணரும் மன்னரும் கலங்கினர். ஆனால் மங்கையர்க்கரசியாரும் அமைச்சரும் மகிழ்ந்தனர். கலங்கிய சமணர், சில கொடுமைகளை இழைத்தனர். மதுரையம்பதியில் அடியார்களோடு சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் சமணர்கள் தீ வைத்தனர். அத்தீ பற்றாதிருக்கவும் தீயின் வெப்பம் பாண்டிய மன்னனைச் சாரவும் சம்பந்தர் பதிகம் பாடி அருளினார். பாண்டிய மன்னனின் வெப்புநோய் சமணர்களால் தீர்க்க முடியாமல் நீடிக்க, அது அவனைவிட்டு நீங்கும்படி, பதிகம் பாடி திருநீறு பூசி அருளினார் சம்பந்தர். சமணர்களோடு சம்பந்தர் செய்த வாதத்தில் சமணர் களுடைய மந்திரம் எழுதப் பெற்று நெருப்பிலிடப்பட்ட அவர்களுடைய ஏடு, எரிந்து சாம்பலாயிற்று. ஆனால் சம்பந்தர் தேவாரப்பதிகம் எழுதிய ஏடு நெருப்பில் வேகாமல் பச்சையாக விளங்கிற்று. வைகையாற்றில் இட்ட சமண ஏடு ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்ல, தேவாரப் பதிகம் பொறித்த ஏடோ எதிரேறிக் கரை சேர்ந்தது,