உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறது. 63 ஏராளமான கத்தோலிக்கர்களால் படிப்பதைத் தலைமுறை தலைமுறையாகப் பல குடும்பங்கள் ஒரு பேறாகக் கருதுகின்றன. மதுரைப்பகுதியில் மகளிர் கல்வி வளர்த்த பெருமைக்குரியவர் சிஸ்டர் ரோஸ் என்ற பிரெஞ்சு அம்மையார் உயர்நிலைப்பள்ளிகள் மாவட்டமெங்கும் நடத்தப் பெறுகின்றன. அவற்றில் ஆவார். மருத்துவத் துறையில் திண்டுக்கல்லில் Missionary Sisters of Immaculate Heart of Mary என்னும் அமைப்பு நடத்தும் புனிதஜோசப் மருத்துவமனையும், தேனியிலுள்ள 'Holy Redeemers Hospital'-ம் குறிப்பிடத்தக்கன. தமிழ்நாட்டிலேயே பெரிய அச்சகங்களுள் ஒன்றான 'டி நோபிளி பிரஸ்' மதுரையில் பல ஆண்டுகளாகப் புகழுடன் விளங்குகிறது. 'கத்தோலிக்கர் சேவை' என்னும் மாத மும்முறை இதழும், 'பொய்யா விளக்கு' என்னும் திங்கள் ஏடும் கத்தோலிக்கரால் வெளியிடப்படுகின்றன. மாவட்டத்தின் பெரும்பகுதி, மதுரை ஆர்ச்பிஷப் அவர் களின் அதிகாரத்திற்கு உட்பட்டது. திண்டுக்கல். பகுதி திருச்சி ஆர்ச்பிஷப் அவர்களின் அருள் ஆணைக்கும் அதிகார வரம்புக்கும் அடங்கியது. றிப் நாகமலையருகே 120 ஏக்கர் பரப்பிலுள்ள 'பாய்ஸ் டவுனில்' பள்ளிக்கூடம், உணவு விடுதி, மருத்துவமனை, பூங்கா, பன் பண்ணை, கோழிப்பண்ணை ஆகியவை உள்ளன. ஸ்பெயின் முதல் நியூசீலந்து வரை பல நாட்டுக் "கிறித்தவ சகோதரர்கள்" இதை நடத்திவருகின்றனர். வீடு வாசல் இல்லாத மாணவர்களுக்கு இது உடுக்கை இழந்தவன் கை போல உதவுகிறது. விடுதலை இயக்கத்தில் பெரும் பங்கு கொண்ட ஜார்ஜ் ஜோசப், இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலிய நாளிதழ்களின் ஆசிரிய ராக இருந்தார். மதுரை மாவட்டக் கழகத் தலைவராயிருந்த சிங்கராயர், கல்விப் பணியில் தம் நீண்ட வாழ்நாளை அர்ப்பணித்த சைமன் பாதிரியார் ஆகியோர் முக்கியமானவர்கள். மாவட்டத்திலுள்ள முக்கியமான தேவாலயங்களைப் பற்றி இந்நூலின் பிறிதொரு பகுதியில் கூறுவோம்,