உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 தீர்த்துவைக்கும் முறை சுவாரசியமானது. பஞ்சாயத்தார் முன்னிலையில் மாப்பிள்ளை வீட்டார் வெற்றிலை, பாக்கு முதலியன வைத்து, அவற்றோடு கூரையிலிருந்து உருவி எடுத்த ஒரு துரும்பையோ, புல்லையோ முறித்து வைத்துப் பெண்வீட்டாரிடம் கொடுப்பார்கள். துரும்பை முறிப்பது ஏற்கெனவே கொண்ட வாழ்க்கை ஒப்பந்தம் முறிந்துவிட்டதற்கு அடையாளம். செய்து குழந்தைகள் பிறந்திருந்தால் அவர்கள் கணவனைச் சாருவர். தீர்த்துக் கொண்டபின் முன்னாள் கணவனும் மனைவியும் பக்கத்து வீடுகளிலேயே புதிய குடும்பங்களுடன் வாழ்ந்து பகையின்றிப் பழகிவருவது இயல்பு. மாவட்டம் எங்கும் ஒவ்வோர் ஊரிலும் ஓர் அம்பலகாரர் இருப்பார். ஆட்சிகளும் ஆளும் கட்சிகளும் மாறினாலும், அம்பலகாரரின் செல்வாக்கு நிலையானது. அவர்கள் வகுக்கும் சட்டங்களும், வழங்கும் தீர்ப்புகளும் வாய்மொழியாக இருப்பினும்,நீதிமன்றங்களால் எழுதி வரையறுக்கப்படும் முடிவு களைவிட ஆற்றல் மிக்கன. முக்குலத்தோரின் தனியரசு புதுக்கோட்டையில் இயங் கியது. அந்த இனத்தவர் இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் அரசர்களாகவும், சேத்தூரிலும் ஏழாயிரம் பண்ணையிலும் குறுநில மன்னராகவும் இருந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில், நெற்கட்டுஞ்செவ்வல், ஊத்துமலை, மணியாச்சி, சிவகிரி, சொக்கன்பட்டி ஆகியவை முக்குலத்தோரின் குறுநில ஆட்சியில் அடங்கியிருந்தன. இவ்வாறு குறிப்பிடத்தக்க முக்குலத்தோர் அரசோ,சிற்றரசோ, குறுநில மன்னரோ, மதுரை மாவட்டத்தில் இல்லாவிட்டாலும், இவ்வினத்தவரின் செல்வாக்கையோ, முக்கியத்துவத்தையோ குறைத்து மதிப்பிடக்கூடாது. தமிழ்ப்பேச்சில் பிறமொழிக் கலப்பு ஏற்படாது பாதுகாத்துவந்துள்ள ஒரு சில இனத்தவருள் முதன்மையானவ முக்குலத்தோர் ஆவர். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் பாண்டித்துரைத்தேவர்; சென்னையில் தமிழ்வட்டம் என்னும் இலக்கிய அமைப்பை உருவாக்கியவர் இம்மாவட்டத்து வி.கே.சி.நடராசன், ஐ.ஏ.எஸ். ஆவார். யாதவர் மதுரை மாவட்டத்தின் வாழ்விலும், மதுரை மாநகரின் வரலாற்றிலும் இடம்பெற்றவர்கள் யாதவர். சிலப்பதிகாரக் காலத்தில் யாதவர் புகழுடன் விளங்கினர் என்பது, யாதவர்