உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாடார்கள் மதுரை மாவட்டத்தில் வணிகத் துறையில் தலைசிறந்து விளங்குபவர்கள் நாடார்கள். இராமநாதபுரம், திருநெல்வேலி, மாவட்டங்கள் தாம் இவர்களுடைய தாயகம். கன்னியாகுமரி மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் இருப்பதைப்போல மதுரை மாவட்டத்தில் நாடார்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இல்லை. எனினும் இம்மாவட்டத்தின் வாழ்வில் இவர்கள் அச்சாணி போல் விளங்கிப் பெரும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர். பிறக்கும்போது மருத்துவச்சி பயன்படுத்தும் நாட்டு மருந்து வகைகள், கத்திகள், வாழ்வதற்கு வேண்டிய உணவுப்பொருள்கள் முதல் ஈமச்சடங்கிற்கு வேண்டிய பொருள்கள் வரை விற்பனை செய்து வருகிறார்கள். சென்ற நூற்றாண்டுவரை மதுரை மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி, திருமங்கலம் என்னும் இரு ஊர்களும் அவற்றைச் சுற்றிய பகுதியும் மட்டுமே மதுரை மாவட்டத்தில் நாடார்களின் தாயகமாக இருந்தது. தாதுவருடப் பஞ்சம் ஏற்பட்ட போது, இராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களின் நீர்வளம் இல்லாத பகுதிகளிலிருந்து சில ஆயிரம் நாடார்கள்,தேனி-- பெரியகுளம் பகுதிக்குக் குடியேறினர். இதே சமயத்தில் திருமங்கலத்திலிருந்து சில நாடார்கள் திண்டுக்கல்லுக்குக் குடியேறினர். சிவகாசியில் ஏற்பட்ட கலகங்களின் போது அங்கிருந்து நாடார்கள் கூட்டம் கூட்டமாக மதுரைக்கு வந்ததாகவும் தெரிகிறது. மதுரை மாநகரில் கீழமாசி வீதியும், அதன் சுற்றுப்புறமும் இவர்களுடைய கோட்டை எனலாம். உணவுப்பொருள்களை விற்பதில் இவர்கள் தனித்திறமை பெற்றிருப்பது கண்கூடு. வண்ணப் பொருள்கள், இரும்புப் பொருள்கள் ஆகிய வற்றைவிற்பது, அச்சகங்கள் நடத்துவது, நாளிதழ்கள் நடத்துவது போன்ற பலவகைத் பலவகைத் துறைகளிலும் இவர்கள் முன்னணியில் காணப்பெறுகின்றனர். மதுரை-இராமநாதபுரம் வணிகச்சபை உணவுப்பொருள்கள் வியாபாரிகள் சங்கமும் இவர் களுடைய ஆதிக்கத்திற்குள் அடங்கியனவே. யும்