உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கலைத்தந்தை கருமுத்து தியாகராசரைத் தொடர்ந்து நகரத்தார் பலர் நூல் ஆலைகளை நிறுவியுள்ளனர். நூல் விற்பனை, துணி வியாபாரம், நூல் ஆலைகளுக்கு வேண்டிய கருவிகளை விற்பனை செய்தல் ஆகிய துறைகளிலும் நகரத்தார் சிலர் கல்லூரிகளும் நிறுவியுள்ளனர். உள்ளனர். 1942-இல் தென்கிழக்கு ஆசியாவில் போர் ஏற்பட்டதன் விளைவாக இந்தியாவிலேயே தங்கள் தொழில்களை விரித்துள்ள நகரத்தார்களில் ஒரு பகுதியினர் மதுரையையே நிலைக்களமாசுக் கொண்டுள்ளனர். காகித வியாபாரம், மருந்து வியாபாரம் ஆகியவற்றில் பலர் ஈடுபட்டுள்ளனர்; பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்கின்றனர். ஆங்கில மருத்துவரான டாக்டர் சண்முகம் செட்டியார், டாக்டர் முத்தையா, டாக்டர், ஏ.டி. தியாகராசன் ஆகியோர் பெரும்புகழ் ஈட்டியுள்ளனர். சேர்க்கும் தமிழிசைக் சங்கம், மதுரைக்குப் பெருமை இராஜா முத்தையா மன்றம் ஆகியவற்றைப்பற்றிப் பிறிதோரிடத் தில் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் வளர்ச்சியில் இவர்களுடைய ஆர்வம் மிகுதியாகும். 'நகர மலர்' என்னும் இதழ் இவ்வினத்தைப்பற்றிய செய்திகளுடன் மதுரையிலிருந்து வெளிவருகிறது. பிராமணர் மதுரை மாவட்டத்தில் ஸ்மார்த்த அய்யர், அய்யங்கார் என்னும் இருவகையினரும் நெடுங்காலமாக உள்ளனர். தமிழ் பேசும் பிராமணர்கள் கிராமப்புறங்களில் பாண்டிய, நாயக்க அரசர்கள் வழங்கிய நிலங்களை விற்றுவிட்டு, மதுரை நகரில் குடியேறி, பிறகு அங்கு இருந்த வீடுகளையும் விற்றுச் சென்னை முதலிய பெருநகர்களுக்கு வடக்குநோக்கிச் சென்றுவிட்டனர். இதற்கான காரணங்கள் பல்; க்காரணங்களை இங்கு ஆய வேண்டுவதில்லை. சான்றாக எழுகடல் அக்கிரகாரம் என்னும் தெருவில் மருந்துக்குக்கூட ஒரு பிராமணர் இல்லை! தெலுங்கு, கன்னட மொழிகளைப் பேசும் பிராமணர்கள் முறையே நாயக்கர், ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையில் ஓரளவு குடியேறினர்.