உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சௌராஷ்டிரர் அரசர்கள் வாழ்கின்ற அல்லது, அரசாங்கங்கள் இயங்கு கின்ற நகர்களில் மொழிபெயர் தேயத்தினர் பலர் வந்து குடியேறுவது உலக இயல்பு. பிற இவ்வகையில் மதுரை மாநகரில் குடியேறியுள்ள மொழியாளருள் எண்ணிக்கைப் பெருக்கத்தால் குறிப்பிடத்தக்க னத்தார் சௌராஷ்டிரர் ஆவர். இவர்கள் மதுரை மாநகரில் மட்டுமன்றி இம்மாவட்டத்தில் திண்டுக்கல், பெரியகுளம், பழனி நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய நகர்களிலும் மதுரை மாநகரைச் சுற்றிய சிற்றூர்களிலும் பெருவாரியாக வாழ் கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சௌராஷ்டிரர் தொகை 41 லட்சம் இருக்கலாம். இதில் சரிபாதிப்பேர் மதுரை மாவட்டத்தில் உள்ளனர். மதுரை நகரில் இவர்கள் ஒன்றரை இலட்சம் பேர் ஆவர். மதுரை மாவட்டத்துச் சௌராஷ்டிரர் ஏனைய மாவட்டத்தினரான தம் இனத்தவரைவிட உயர்ந்தவர்கள் என்று தங்களைக் கருதுகின்றனர். கூடுமானவரை மதுரை மாவட்டத் திலேயே மண உறவு வைத்துக் கொள்கின்றனர். மதுரை மாநகர், தமிழ்நாட்டுச் சௌராஷ்டிரர்களின் தலைநகராக விளங்குகிறது. இவ்வினத்தவர்க்கு உரிய மத்திய சபை மதுரையில் உள்ளது. ני ம் சௌராஷ்டிரர் என்பார் குஜராத் மாநிலத்தின் தென் பகுதியான சௌராஷ்டிரத்தினின்றும் வந்து தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பதை அவர்களுடைய பெயரே தெளிவாகத் தரிவிக்கிறது. 13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன், செளராஷ்டிரத்தைப் படையெடுத்தபோது ஒரு போர் மூண்டது. அப்போது இவர்கள் மகாராஷ்டிரத்திற்குச் சென்று தஞ்சம் அடைந்தனர். பின்னர் ஆந்திர நாட்டுக்குக் குடியேறி, விஜயநகர அரசர்களின் ஆதரவைப் பெற்றனர். விஜயநகரப் பேரரசின் துணையோடு மதுரையை ஆண்டுவந்த திருமலைநாயக்க மன்னர், தம் அரண்மனைக்குத் தேவையான சரிகை வேலைப்பாடு அமைந்த ஆடைகளை நெய்து வழங்கிவர வேண்டுமென்று இவர்களைக் கேட்டுக்கொண்டதாகவும் அரண்மனையைச் சுற்றியுள்ள தெருக் களை இவர்கள் வாழ்ந்து வருவதற்காக ஒதுக்கினார் என்றும் கூறப் படுகிறது.