உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 னைய சொத்துகளைப் பெண்களின் கல்விக்காக ஈந்தவர். தமது அரிய நூலகத்தை சௌராஷ்டிரக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கிய வள்ளல். அப்பழுக்கு இல்லாத இந்த தியாகச் செம்மல் தம் எழுபதாம் ஆண்டு விழா மலரைத் தம்மைப் பற்றிய கட்டுரைகளோ படங்களோ இல்லாமல் பக்திப் பாடல்கள் கொண்ட ஆன்மிக மலராக வெளிவரச் செய்தது, இவருடைய அடக்கத்துக்கும் எளிமைக்கும் இனிமைக்கும் சான்று. ரில் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், கோவை பெரிய நாயக்கன்பாளையம் இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம் என்னும் பெயரில் திரு. அவினாசிலிங்கம் அவர்கள் தொடங்கி நடத்திவரும் ஏராளமான உயர்கல்வி நிறுவனங்கள், கல்லுப்பட்டி காந்தி நிகேதன், வேதாரண்யத்தில் சர்தார் வேதரத்தினம் அவர்கள் நிறுவிய கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம், வட -லூ ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் தொடங்கிய வள்ளலார் குருகுலம் போன்ற ஏராளமான கல்வி நிலையங்களின் ஆட்சிக் குழுவில் தலைவராகவோ பொறுப்பு மிக்க உறுப்பின ராகவோ இருந்து அந்த நிறுவனங்கள் நன்றாக இயங்க, தம்மாலான அனைத்தும் செய்து வரும் கல்வியாளர்,திரு. ந. ம.ரா.சுப்பராமன் அவர்களே ஆவார்கள். தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கம், மாநில ஆதாரக் கல்வி நிறுவனங்களின் அமைப்பு ஆகியவற்றிலும் இவர் தலைவராக இருந்திருக்கிறார். மதுரையில் காந்தி மியூசியம் மியூசியம் ஏற்படக் காரணமாக இருந்தவர் இவரே ஆவார். பதவியும் விளம்பரமும் விரும்பாத இவர் காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவே மதுரை மாநகராட்சித் தலைவராக இரு முறையும் ம் சட்டமன்ற உறுப்பினராய்ப் பலமுறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் இருக்க இசைந்தார். கலைத்துறையில், மதுரைச் சௌராஷ்டிரர்களில் கீழ்க் கண்டவர்கள் புகழ் பெற்றுள்ளனர். இசைக்கலைஞர்கள் - திரு. தொப்பே கிருஷ்ண பாகவதர், திரு. பாணி பிரதர்ஸ் என்ற சகோதரர்கள், மதுரை ஸத்குரு சங்கீத சமாஜம் நிறுவிய ஸ்வரஜோதி டி.ஏ.நாகசாமி பாகவதர்,