உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 மரங்களின்மீது பரண்களை அமைத்தும், பாறை இடுக்கு களிலும் குகைகளிலும் பளியர் வாழ்கின்றனர். வட்டமான குடிசைகளை அமைத்துக் கொள்கின்றனர். . மிகக் குறைந்த ஆடை, தடித்த உதடு, கறுப்புநிறம் குட்டையான சுருண்ட மூடி, ஆகியவற்றால் பளியர்களை அடையாளம் தெரிந்துகொள்ளலாம். கூர்மையான மரக்கம்புகளை எப்போதும் வைத்திருப்பார்கள். தேனடைகளை எடுக்க, பயங்கரமான பாறைகளில் ஏறுவது இவர்களுடைய இயல்பு. விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவர். காய், கனி,தேன்,தானியங்களையும் உண்பர். இவர்கள் அடர்ந்த காடுகளில் நிலைகொள்ளாது திரிந்தவர் கள்; காடுகள் அழிந்து மலைநகரங்களில் மக்கள் பெருகி நாகரிக வயப்பட்டு அரசின் ஊடுருவலும் ஏற்பட்டிருப்பதால், ஆங்காங்கே நிலையாகத் தங்கத் தொடங்கியுள்ளனர். முதுவர் ஏலக்காய் மலையிலும் அதையடுத்துள்ள கோவை மாவட்டத்திலும் கேரளத்து இடுக்கி மாவட்டத்திலும் முதுவர் வாழ்கின்றனர். சமதரையில் வாழும் மக்கள், முதுவரைத் தகப்பன்மார் என்று குறிப்பிடுவர். முதுவரின் தாயகம் மதுரை மாநகர் என்பர்.14-ஆம் நூற்றாண்டில் ஒரு போர் மூண்டதும், இவர்கள் மதுரையினின்று வெளியேறி மேற்குத்தொடர்ச்சிமலைப்பகு திகளுக்குக் குழந்தைகளை முதுகில் சுமந்து சென்றதால் முதுவர் எனப் பெயர் பெற்ற தாயும் கூறப்படுகிறது. மலைவாழ் மக்களில் முன்னோர் (முதியர்) என்ற கருத்தும் நிலவுகிறது. இவர்களுடைய வழிபடு கடவுள் மீனாட்சியம்மை. காடுகளுக்கு ஊடே வாழ்வது முதுவர் இயல்பு. கம்பு, கேழ்வரகு, ஏலக்காய் ஆகியவற்றைப் பயிர் செய்வதிலும் வேட்டையாடுவதிலும் இவர்கள் வல்லவர்கள். கருங்குரங்கின் இறைச்சியை உண்டால் மலடியும் மகப்பேறு பெறுவாள் என்பது இவர்களுடைய நம்பிக்கை. தனித்தும் பிறரை எதிர்பாராமலும் வாழ்வது இவர்களுடைய குறிக்கோள்.