பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 அ.ச. ஞானசம்பந்தன்

 வழங்கி அந்த ஆற்றலை மக்களுக்குப் பயன்படுமாறு செய்வதுதான் அடிப்படை நோக்கமாகும்.

கோபுரங்கள் இருக்கின்றன. கோபுரத்தின் மீது கலசங்கள் இருக்கின்றன. இந்தக் கலசங்களுக்குள்ளும் பலவகையான பொருள்களையிட்டு நிரப்பி, கலசங்களை கோபுரத்தின் மீது பதித்துவிடுகிறார்கள். இந்தக் கலசங்களோடு கூடிய கோபுரம் ஸ்தூல வடிவமாக இறைவனைக் குறிக்கிற ஒன்று என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

ஆக ஸ்தூல வடிவமாக இருக்கிற கோபுரங் களுக்கும், உள்ளே சூக்ஷம வடிவமாக இருக்கின்ற விக்கிரகங்களுக்கும் ஒருசேர ஆற்றலைத் தருவதுதான் குடமுழுக்கு விழாவின் அடிப்படை நோக்கமாகும்.

இந்தக் கோவில்களிலுள்ள படிமங்கள் நாளா வட்டத்தில் தங்களுடைய் ஆற்றலை இழக்க முடியுமா என்றால் ஓரளவு இழக்கவும் கூடும். அது எப்படி என்றால் இந்தக் கோயிலுக்கு வருகிற ஆயிரக்கணக்கானவர்கள், பதினாயிரக்கணக்கானவர்கள் எத்தனையோ வகையான மாறுபாடுகள், கருத்து வேறுபாடுகள், எண்ணப் போராட்டங்கள் முதலிய பாபங்கள் நிறைந்து உள்ளே செல்வதால் நாளா வட்டத்தில் விக்கிரகங்களின் ஆற்றல் ஒரளவு குறையவும் கூடும். அதற்காகத்தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்வது என்பது ஸ்தூல, சூக்ஷம வடிங்களுக்கு ஆற்றலை மறுபடியும் வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் என அறிந்து கொள்ளல் வேண்டும். ஆக திருக்கோயில்கள் குடமுழுக்கு அன்று முழு ஆற்றலைப் பெற்று