பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 அ.ச. ஞானசம்பந்தன்


அங்காந்து இருக்கிறாள், எனப் பாசவதைப் பரணிக் காரர் சொல்லுவார்.

அதைத்தான் இங்கே சித்தர் கொஞ்சம் வேகத்தோடு பேசுவார்.

சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்

இலைகளைத் தின்றுகொண்டு தண்ணிர் குடிப்பவர்களே!

சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே

ஆண்டவன் படைத்த உணவு இருக்கும்போது இந்த இலைகளையே தின்று கொண்டு இருந்தீர்களானால் உடம்புதாண்டாப்பா குறையும்.

சிட்டரோது வேதமும் சிறந்தஆக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்றமெய்ம்மை நூல்களும் கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்

ஆக வேதத்திலிருந்து, ஆகமங்களிலிருந்து, உபநிஷத்துகளிலிருந்து என்ன ஆகிவிட்டன? ஏதோ ஒரு கருத்தை, சிறந்த தத்துவத்தை சொல்ல வந்திருக்கிற கருவிகள் அவை என்பதை மறந்துவிட்டு அவற்றையே வழிபடத் தொடங்கினார்கள்.

சாலையிலே வருகிறான். சென்னைப் பட்டினம் 60 கிலோ மீட்டர் என கைகாட்டி மரம் போட்டிருக்கிறது. அது இவனுடைய அறிவை வழிப்படுத்தி, இதன் வழியாகப் போ என்று சொல்வதற்கு. அதற்கடியில் உட்கார்ந்துகொண்டு 'இதுதான் சென்னைப் பட்டினம் என்று ஒருவன் சொல்வானேயானால் அதற்கு என்ன செய்வது?