பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 அ.ச. ஞானசம்பந்தன்


நேற்றன்று. மிகப் பல காலமாக இந்த நாட்டிலே இருந்து வருகின்ற ஒன்று.

அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும்
அடக்கிய குளிகையோ டாடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்... கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழும் கார ணக்குரு

என்று சொல்லுவார்கள். கடம் - உடம்பு. ஆக இந்த உடம்பை அப்படியே வைத்துக்கொள்வது - வஜ்ரத் துக்கே பழுது வாய்க்குமாயினும் வல்லுடம்புக்கு ஒரு குறை வாய்த்திடாது.

இதைப் பின்னே வந்தவர்கள் என்ன நினைத்து விட்டார்கள். “ஏதோ பஞ்சபூதத்தினாலான இந்த உடம்பை வச்சுகிறது என்று நினைத்தார்கள். அதிலேதான் வந்தது தவறு.

வள்ளல்பெருமான் ‘சாவா மூவாப் பெரு வாழ்வு' என்று சொன்னவுடனே ஊரிலே இருக்கிற பிணத்தை எல்லாம் கொண்டுவந்து போட்டு உயிர்ப் பிக்கணும் என்று நினைத்தார்கள். சித்தர் பெரு மக்களுடைய அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாததனாலே வந்த பிரச்சினை இது.

உடம்பு வேண்டுமானால் இதை விட்டுவிட்டு வேறு ஓர் உடம்பு, அதை விட்டுவிட்டு வேறோர் உடம்பு. ஏனையோர்கள் விஷயத்தில் அவரவர்கள் வினைப்படி உடம்பு கொடுக்கப்படும். சித்தர்களைப் பொறுத்த மட்டிலே அப்படியில்லை. பாம்பு வடிவோ, புலி வடிவோ மனித உடம்போ எது வேணுமோ அந்த உடம்பை எடுத்துக்கொள்ள முடியும் அவர்களாலே, கூடுவிட்டுக் கூடு பாய்கிற காரணத்தினால். -