உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மனத்தின் தோற்றம்



சிதம்பரப் பாட்டியலும், சம்பந்தரின் சம்பந்தப் பாட்டியல் என்னும் வரையறுத்த பாட்டியலும், விருத்தப் பாவியல் முதலிய பிற்காலத்தார் இயற்றிய இன்னும் பல நூல்களும், தமிழ் வளர்ச்சிக்கு இலக்கணப் புலவர்கள் அளித்த அறிவுக் கொடைகளாகும்.

மேலும் பிற்காலத்தில் உரைநடையில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ள இலக்கண நூல்களும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. அவற்றுள், ஆறுமுகநாவலர் எழுதிய இலக்கணச் சுருக்கம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.

இலக்கணத்தின் நன்மை

இலக்கணத்தின் நன்மையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோமாயின், இலக்கணப் புலவர்கள் கொடை கொடுத்த நூல்களின் சிறப்பு விளங்கும்.

பெரும்பாலோர் தமிழைப் பிழையாகவே எழுதுகின் றனர். கடிதம், விளம்பரத் தாள், பெயர்ப் பலகை, குறிப்பிட்ட சில வெளியீடுகள் முதலியவற்றில் பிழைகள் மலிந்திருக்கக் காணலாம். இதற்குக் காரணம் இலக்கண அறிவு இன்மையே. இலக்கண விதி தெரியாமல் போனால் குறைவு என்ன? சிறு பிழையுடன் எழுதினால்தான் என்ன? ஏறக்குறையக் கருத்தைத் தெரிவித்தால் போதாதா? - என்ற வினாக்கள் எழலாம் - எழுகின்றன.

உலகில் எந்த மொழியினையும் பிழைபடப் பேசுவ தாலும் எழுதுவதாலும் உண்டாகும் கேடு சொல்லும் தரத்ததன்று. காட்டாக நம் தென்னிந்திய மொழிகளையே எடுத்துக் கொள்வோம்.

சில ஆயிரம் ஆண்டுகட்கு முன் தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மொழியே பேசப்பட்டிருக்கலாம். ஒரு மொழியைப்