சுந்தர சண்முகனார்
141
- “இக்குழு மகளிருள் யார் வனப்பினால்
- மிக்கவள் எனத்தமை வினவினா னெதிர்,
- முக்கனிகளுள் சுவை முதிர்ச்சி பெற்றுளது
- எக்கனி அதனைநீர் இயம்புவீர் என்பார்” (4-35)
இந்தக் காலத்தில், பெண்களைக் கேலி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தித் தாள்களில் படிக்கிறோம். நடுத்தெருவில் செல்லும் பெண் களைப் பற்றித் திறனாய்வு செய்யும் வல்லுநர்கள்’ எந்தக் காலத்திலும் இருப்பார்கள் போலும் ஆண் - பெண் என்ற இரு வேறு இனத்தைப் படைத்த இயற்கையின் விளையாட்டு போலும் இது. கருத்து வெளியீட்டில் இது ஒரு புதுமை யன்றோ?
4.2 ஒன்றை ஒன்றால் கட்டுதல்
விளவல நாட்டு மக்கள், பொறையும் புகழும், இன் சொல்லும் விருந்தோம்பலும், பெரியோரின் அறிவுரையும் மன அடக்கமும், அறச் செய்கையும் செல்வமும் உடையவர் களாம். இதைச் சிவப்பிரகாசர் ஒரு புதுமையான முறையில் விளக்கியுள்ளார்.
பொறை என்ற கயிற்றால் புகழையும், இன்சொல் என்னும் கயிற்றால் விருந்தையும். பெரியோரின் அறிவுரை என்னும் கயிற்றால் அலைந்து திரியும் மனத்தையும், அறத்தால் (பிறர்க்குக் கொடுத்தலால்) செல்வத்தையும் கட்டிப் போட்டு நிலைபெறச் செய்து விட்டார்களாம். என்பது பாடல்.
- “பொறைக் கயிற்றின் புகழை, இன்சொல் எனும்
- விறல் கயிற்றின் விருந்தைக், குரவர் சொல்
- மறைக் கயிற்றின் மனத்தைத், திருவைகல்
- அறக் கயிற்றின் அசைப்பவர் எங்குமே” (3-4)
பொறைக் கயிற்றின் புகழை. “பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” (156) என்பது திருக்குறள்.