இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுந்தர சண்முகனார்
159
மான ஞாயிறு இந்த அருவி நீர் படலால் குளிர்ந்த திங்கள் போல் குளிர்கிறதாம்: இது, தீ மேல் நோக்கியும் நீர் கீழ் நோக்கியும் செல்லும் என்னும் தருக்க - நெறிமுறைக்கு மாறாக உள்ளதாம். பாடல்:
- “தூங்கிசை அருவிபாயத் தொளைக்கை
- வெண்கோட்டு உரல்கால்
- ஈர்ங்கவுள் நெடுகல்யானை ஏற்ப
- வெந்தழல் அலாமல்
- தேங்கு தண்புனல் மேல்நோக்காது
- என்பது தீரச் சென்று
- பூங்கதிர் பணிவெண் திங்கள்
- போன்மெனத் திவலை செய்யும்” (19-16)
- “தூங்கிசை அருவிபாயத் தொளைக்கை
என்பது பாடல். ஏற்ப = மேல் நோக்கி எறிய பூங்கதிர்= ஞாயிறு.
இவ்வாறாகப் பிரபுலிங்கலீலை என்னும் இலக்கிய உலகில் பல துறைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாம். சிவப்பிரகாச அடிகளாரைக் ‘கற்பனைக் களஞ்சியம்’ என்னும் சிறப்புப் பெயரால் குறிப்பிட இந்நூல் ஒன்றே போதுமே!