சுந்தர சண்முகனார்
83
சிலர் கூறுவதும் ஈண்டு கருதத் தக்கது. வேதாந்த தேசிகர் தம் பாடல்களில்,
- “மகிழ்ந்து வாழும் போதிவை நாம் பொன்னயிங்தை
- நகரில் முன்னாள்”
- “அயிங்தை மாநகரில் அமர்ந்தனை எமக்காய்”
எனத் திருவயிந்திரபுரத்தை நகர் - மாநகர் எனச் சிறப்பித்துக் கூறியிருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு, அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் ஒரு சிறந்த நகராய் விளங்கியதென அறியலாம்.
திருவயிந்திரபுரச் சீமையை ஆங்கிலேயர்கள் 1749 ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப்பிடமிருந்து 28,000 உரூபாய்க்கு வாங்கினர். வடமொழியும் தென்மொழியும் பயின்று வந்த திருவயிந்திரபுரம் வைணவ அந்தணர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமும் பயிலத் தொடங்கினர். அதன் பயனாய்ப் பல குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறிடங்களில் இன்று அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கு அன்று இருந்த பொலிவு இன்று இல்லையென்றே சொல்லலாம்; இந்த ஊரில் வடகலை வைணவர்களும் தென்கலை வைணவர்களும் பிணங்கி நீதிமன்றம் வரையும் சென்று வழக்கிட்டுக் கொண்டதுண்டு. இவ்வூரில், கிழக்கே 5 கி. மீ. தொலைவி லுள்ள கடலூர்ப் பகுதியைக் கிழக்கு என்னும் திசைப் பெயரால் சுட்டும் வழக்கம் உள்ளது; அதாவது, கிழக்கே போகிறேன்', 'கிழக்கே போயிருக்கிறார் என்னும் வழக்கை இவ்வூரில் காணலாம். இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்துள்ளது.
இவ்வூரில் கெடிலம் ஆற்றில் அணை கட்டப்பட்டிருப்ப தால், இதன் சுற்று வட்டாரத்தில் வளத்திற்குக் குறை வில்லை. இவ்வூர் மலையிலும் மலையடிவாரத்திலும் வெள்ளைக் களிமண் படிவம் இரண்டறக் கலந்துள்ளது.