பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகற் கனவு 59 நினைப்பிருப்பதையும் அது கு றி ப் பா. க க் காட்டு கிறது. 4. செயலில் வேண்டுமென எழுகின்ற எண்ணத் திற்கும், செயலில் இறங்குவதற்கும் இடையே உண் டாகும் பல முக்கியமான நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்முக இருக்கலாம். 5. மிக நல்ல முயற்சியோடு திடமாகச் செயலில் ஈடுபட்டிருக்கும் வேளையிலல்லாது மற்ற வேளைகளில் அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது. பகற் கனவும் சிறு வயது முதற்கொண்டே உண்டா கிறது. சிறு குழந்தைகள் விளையாடுவதை நாம் பார்த் திருக்கிருேம். ஒரு குழந்தை தன்னைத் தாயாகவும், ஏதாவதொரு பொருளைக் குழந்தையாகவும் கற்பனை செய்துகொள்ளுகிறது. தனது தாய் தன்னிடம் எவ் விதம் நடந்து கொள்ளுகிருளோ அதுபோலவே கற்பனைக் குழந்தையிடம் அது நடக்கின்றது. தாயைப் போலவே பேசுகிறது, கடுஞ்சொல் கூறுகிறது. தண் டனை கொடுக்கிறது. அந்தக் கற்பனைக் குழந்தையிடம் தன்னிடமுள்ள குறும்புகள் எல்லாவற்றையும் இது காண்கிறது. இவ்விதமாகத் தன்னை உயர்த்தியும், தன்னிடமுள்ள குறைகள் அக் கற்பனைக் குழந்தையிடம் இருப்பதாக எண்ணிக்கொண்டும் அது விளையாடி மன. நிறைவு பெறுகிறது. மூன்று வயதாக இருக்கும்போது சுந்தரி அடிக்கடி தனக்கே தனியாக ஒரு சொந்த வீடிருப்பதாகப் பேசு வாள். 'என் வீட்டிலே நிறைய மிட்டாய் இருக்கிறது. பெரிய பெட்டி இருக்கிறது" என்று என்ன என்னவோ பெருமையாகச் சொல்லிக்கொள்ளுவாள். ஒருநாள் அவள் தன் வீட்டிலே பெரிய விருந்து நடக்கிறதென்